இவரும் எக்கச்சக்க கவர்ச்சிக்கு மாறிட்டாரே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ.. வியப்பில் ரசிகர்கள்

By

சென்னை: பிரபல நடிகை எக்கச்சக்க கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றவர் மெளனி ராய்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

இந்தியில் அவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது.

லண்டன் கான்ஃபிடன்ஷியல்

லண்டன் கான்ஃபிடன்ஷியல்

இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் மெளனி ராய். படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது. லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்றதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கு சிக்கிக் கொண்டதும் பழைய கதை.

மல்லாக்கப் படுத்து

மல்லாக்கப் படுத்து

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவருக்கு, இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்றிருந்தார். அங்கிருந்து, மரங்களின் மீது மல்லாக்கப் படுத்தபடியும் அமர்ந்தபடியும் வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவின.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

கடந்த சில நாட்களாக, ஹோம்லி லுக் ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்த அவர் இப்போது, ஓவர் கிளாமரில் சில ஸ்டில்களை பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், திடீர்னு என்னாச்சு இவருக்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆஹோ, ஓஹோ

ஆஹோ, ஓஹோ

இந்த போட்டோக்களும் வேகமாக பரவி வருகின்றன. சில நெட்டிசன்ஸ், எப்படி ஒருத்தர் இவ்வளவு அழகா இருக்க முடியும்? என்றும் உங்க அழகுக்கு ஈடு இணையே இல்லை என்றும் பலர் வழிந்துள்ளனர். அவர் அழகை ஆஹோ, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

வயசே ஆகாதா?

வயசே ஆகாதா?

சில ரசிகைகள், அவரிடம் அழகு சீக்ரெட்ஸை கேட்டுள்ளனர். பலர், ஒரே ஒரு ரிப்ளை கேட்டு கெஞ்சியுள்ளனர். உங்களுக்கு வயசே ஆகாதா மெளனி என சிலரும், நீங்க என்ன உடை போட்டாலும் அழகுதான், இந்த கிளாமர் நினைச்சுப் பார்க்க முடியாத லெவல்ல இருக்கு எனவும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X