சான்டாவாக மாறிய ’நாகினி’ மெளனி ராய்.. என்ன செஞ்சாரு தெரியுமா?
Recommended Video
மும்பை: நாகினி சீரியலில் நடித்து நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள மெளனி ராய், தனது விடாமுயற்சியால் பாலிவுட் நாயகியாக முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சான்டாவாக மாறிய மெளனி ராய், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்.
குழந்தைகளுடன் ஆடி பாடி மகிழ்ந்த மெளனி ராய், அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

நாகினி
கலர்ஸ் டிவியில் இந்தியில் வெளியான நாகினி சீரியல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப்பிங் செய்யபட்டு ரிலீசானது. நாயகி சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மெளனி ராய்க்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினர்.

சீரியல் டு சினிமா
நாகினி சீரியலில் நடித்து அசத்தி வந்த மெளனி ராய், அதன் பலனாக பாலிவுட்டில் சல்மான் கான், அக்ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
பிறருக்கு உதவி செய்வது தான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் குறிக்கோளாகும். விராத் கோலியை தொடர்ந்து நடிகை மெளனி ராயும் சான்டா கிளாஸாக மாறி எச்.ஐ.வி., பாதிப்பால் வாடும் குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ந்துள்ளார்.
குழந்தைகளுடன் டான்ஸ்
குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிய நடிகை மெளனி ராய், அந்த குட்டி பசங்களுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டமும் போட்டார். எல்லா குழந்தைகளும் கிறிஸ்துமஸ் குல்லாவை போட்டுக் கொண்டு மெளனி ராயுடன் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்துமஸ் பரிசு
குழந்தைகளுடன் நடனமாடிய நடிகை மெளனி ராய், அவர்களுக்கு பார்பி பொம்மை உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கினார். குழந்தைகளுடன் மெளனி ராய் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெளனி ராயின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











