கனவு நினைவாகிறது… பாகுபலி ரம்யாகிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்கும் இந்தி நடிகை!
பாகுபலி வலைதள தொடரில் மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளார்
மும்பை: பாகுபலி சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய கனவு என பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை குவித்த திரைப்படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்தியராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்போது பாகுபலி கதையை நெட்ஃபிளிக்ஸ் வலைதளத் தொடராக தயாரிக்க உள்ளது.

ரம்யாகிருஷ்ணன்
பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதிகாரம் செய்யும் சிவகாமி தேவி, காலக்கேயர்களை எதிர்த்து போரிடும் வீரத்திற்கு பெயர்பெற்ற சிவகாமி மற்றும் குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் சிவகாமி என ரம்யாகிருஷ்ணன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

மிருனால் தாக்கூர்
தற்போது நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் வலைதளத் தொடரில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம், தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக உணர்கிறேன். அதில் சிறந்த அம்மாவாகவும் அதே நேரத்தில் "இதுவே என் கட்டளை ... என் கட்டளையே சாசனம் என அதிகாரமிடும் வசனமும் இருப்பது மிகச் சிறப்பு. அது என்னை மிகவும் கவர்ந்த வசனம் எனவும் தெரிவித்தார்.

தேவ கட்டா
இதில் ராகுல் போஸ், சித்தார்த் அரோரா, அட்டுல் குல்கர்னி, அனூப் சோனி, வாகர் ஷாய்க் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிவகாமி தேவியின் இளைமைக்கால கதாபாத்திரத்தில் மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். இதை பிரவீன் சத்தரு மற்றும் தேவ கட்டா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

தாய்லாந்து
இந்த வலைதளத் தொடர் குறித்துப் பேசிய இயக்குனர் பிரவீன் இது மகிழ்மதி உலகத்திற்குள் புகுந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு விவரங்களையும் ஆராயும் விதமாக இருக்கும். கேரளா, தாய்லாந்து என பல இடங்களில் ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வலைதளத் தொடராக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











