கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. ஒரே டைம்ல மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே முத்தம் கொடுத்தா!
மும்பை: பாலிவுட் திரையுலகிலேயே இப்போதைக்கு செம ஹேப்பியாக இருக்கும் நடிகர் என்றால் வருண் தவான் தான் என்கின்றனர். அதற்கு காரணம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ள அவரது புதிய இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இருவரையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போஸ்டரை வெளியிட்டு பாலிவுட் நடிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையே பொறாமைப்பட வைத்துவிட்டார் வருண் தவான்.

அட்லி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி என 2 ஹீரோயின்களுடன் ஜாலியாக நடித்த வருண் தவானின் தெறி ரீமேக் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில், தற்போது மீண்டும் 2 ஹீரோயின்களுடன் ரொமான்டிக் படத்தில் நடித்துள்ளார்.
ஜமாய்க்கும் வருண் தவான்: ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமான வருண் தவான் 2012ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் ஹீரோவாக இந்தியில் அறிமுகமானார். பேடியா படத்தில் பேயாக நடித்த வருண் தவான் மூஞ்சியா, தம்மா உள்ளிட்ட படங்களிலும் அதே ரோலில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார். கடைசியாக பார்டர் 2 படத்தில் நடித்தும் பெரிய வெற்றி பெறவில்லை. இந்நிலையில், 2 நடிகைகளுடன் Hai Jawani Toh Ishq Hona Hai படத்தில் நடித்துள்ளார். வரும் மே 22ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?: நடிகர் பிரசாந்தை அவரது அப்பா தியாகராஜன் இயக்குவது போல வருண் தவான் நடித்துள்ள இந்த படத்தை அவரது அப்பா டேவிட் தவான் இயக்கியுள்ளார். வல்லவன் படத்தில் சிம்பு நயன்தாரா, ரீமா சென் உடன் ஆட்டம் போட்டது போல கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல இந்த படத்தில் வருண் தவான் ஜாலியாக ஜமாய்த்துள்ளார் என்கின்றனர். தண்ணீரில் இருந்து பூஜா ஹெக்டேவை தூக்கும் வீடியோ காட்சிகளும் லீக் ஆகி வைரலாகின.

பூஜா, மிருணாள் முத்தம்: இந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக இருக்கும் நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் ஒரே நேரத்தில் வருண் தவானுக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் கண்டிப்பாக இந்த படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications