Mrunal Thakur: ஆத்தி எவ்ளோ பெருசு.. டெட்டி டேவை மிருணாள் தாக்கூர் யாருடன் கொண்டாடி இருக்காரு பாருங்க!
மும்பை: காதலர் தினக் கொண்டாட்டம் மற்றவர்களை விட நடிகை மிருணாள் தாக்கூரிடம் களைகட்டி வருகிறது. டெட்டி டேவான இன்று மிருணாள் தாக்கூர் ஆள் உயர டெட்டி பியருடன் பிரபல பாலிவுட் நடிகருடன் கொடுத்த போஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து "டூ தீவானே ஷெஹர் மேய்ன்" (Do Deewane Seher Mein) என்ற காதல் படத்தை காதலர் தினத்தை குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளன. மிருணாள் தாக்கூர், சித்தாந்த் சதுர்வேதி நடிக்கும் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரவி உத்யவார் இயக்கியுள்ள இப்படம் 2026 பிப்ரவரி 20 அன்று திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

நடிகர் தனுஷ் உடனான கிசுகிசுக்கள் நடிகை மிருணாள் தாக்கூரை ரொம்பவே பாதித்த நிலையில், தனுஷின் இந்தி படத்தின் ரிலீஸின் போது கூட மெளனம் காத்த மிருணாள் தாக்கூர் தனது படத்துக்கும் அது தடையாக மாறிவிடுமோ என நினைத்து தனுஷ் தனக்கு அண்ணன் போன்றவர் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
டெட்டி டே கொண்டாடிய மிருணாள் தாக்கூர்: இந்நிலையில், டெட்டி டேவை நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் மிருணாள் தாக்கூர் கொண்டாடிய பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. டெட்டி பியர் சைஸை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து விட்டனர். மிருணாள் தாக்கூர் தனுஷை காதலிக்கவில்லை என்பது உறுதியான நிலையில், சித்தாந்த் உடன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட் ஆகி வருகிறதே என புதிய ரூமர்களையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகின்றனர். ஆனால், முழுக்க முழுக்க லவ் படத்துக்கான புரமோஷனை இருவரும் செய்து வருகின்றனர்.
பாலிவுட் படம்: சஞ்சய் லீலா பன்சாலி, பிரேர்னா சிங், உமேஷ் குமார் பன்சல் மற்றும் பாரத் குமார் ரங்கா ஆகியோர், ரவி உத்யவார் ஃபிலிம்ஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் "டூ தீவானே ஷெஹர் மேய்ன்" திரைப்படத்தை ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக ரசிகர்களுக்கு வழங்குவதில் உறுதியாக உள்ளனர்.

நல்ல வரவேற்பு: டீசரில் இடம்பெற்றுள்ள "டூ தீவானே ஷெஹர் மேய்ன்" பாடல் கேட்போரை உடனடியாக ஈர்க்கிறது. இது யதார்த்தமான, சிக்கல்கள் நிறைந்த அதேசமயம் நெகிழ்ச்சியான காதல் கதையை சுட்டிக் காட்டுகிறது. ஆச்சரியங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் பாசத்தால் நிறைந்த உறவு காட்சிகள் பல தம்பதிகளுக்கு பரிச்சயமாக இருக்கும்.
கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிடுச்சு: மிருணாள் தாக்கூர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி இடையேயான ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி, அவர்களின் நிஜ வாழ்க்கைப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. சமீபத்திய நிகழ்வொன்றில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தை சித்தாந்த் தனது இன்ஸ்டாகிராம் ரீலில், அதே கிளாசிக் பாடலைப் பயன்படுத்தி, "டூ தீவானே❤️" என்று தலைப்பிட்டுப் பகிர்ந்தார்.
அதிகம் விவாதிக்கப்பட்ட டீசர், பிரபலமான தலைப்புப் பாடல், மற்றும் நாயகன்-நாயகி இடையேயான வெளிப்படையான கெமிஸ்ட்ரி ஆகியவை "டூ தீவானே ஷெஹர் மேய்ன்" படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. யதார்த்தமான காதல் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக அமையும்.


Click it and Unblock the Notifications











