காதல் பற்றி மிருணாள் தாகூர் ஓபன் டாக்.. அவங்க சொல்றதை பார்த்தால் இப்போ எதுவும் சான்ஸ் இல்லையோ?

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர் மிருணாள் தாகூர். அவரது அழகும்,திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அவர். இந்நிலையில் காதல் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நடிகை மிருணாள் தாகூர் மராத்தி மொழியில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அங்கு அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ஹிந்திக்கு சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சீதாராமம் படத்தி நடித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டது. மிருணாளின் அழகும், நடிப்பும் அனைவரையும் வசீகரித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவருமே அவரை கொண்டாடி தீர்த்தார்கள்.

செம பிஸியான நடிகை: அந்தப் படத்தின் சமயத்தில் சோஷியல் மீடியா ரிலீஸ்களில் அவர்தான் இருந்தார். இதன் காரணமாக தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Mrunal Thakur Clarifies Relationship Status Amid Dhanush Rumours No Time for Love
Photo Credit:

தனுஷுடன் கிசுகிசு?: செம பிஸியாக இருக்கும் அவரை சுற்றி சமீபமாக காதல் சர்ச்சை ஓடுகிறது. அதாவது நடிகர் தனுஷுக்கும், மிருணாளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்பட்டது. மேலும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மிருணாள். இந்த விஷயத்தில் தனக்கு அதீதமான விளம்பரம் கிடைத்ததாகவும்; தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவர் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் ஒரு பேட்டியில் போட்டு உடைத்திருந்தார்.

Also Read
கைவிட்ட சிவகார்த்திகேயன்?.. அஜித்திடம் தஞ்சம் புகும் வெங்கட் பிரபு?.. மங்காத்தா 2 ரெடியா?
கைவிட்ட சிவகார்த்திகேயன்?.. அஜித்திடம் தஞ்சம் புகும் வெங்கட் பிரபு?.. மங்காத்தா 2 ரெடியா?

தயாரிப்பாளரின் ஆசை: கடைசியாக அவரது நடிப்பில் டக்கோயிட் திரைப்படம் ரிலீஸானது. கடந்த பத்தாம் தேதி வந்த அப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தின் விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மிருணாள் தாகூரை பார்த்து, 'உங்களை தென்னிந்தியாவிலேயே கட்டிப்போட ஆசை. எனவே நீங்கள் தெலுங்கு சினிமா துறையிலிருந்து ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு அவரோ சிரித்துக்கொண்டே பதில் எதுவும் கொடுக்காமல் சமாளித்துவிட்டார்.

காதலிக்க நேரமில்லை: ஓபனாகவே பொதுவெளியில் தயாரிப்பாளர் இப்படி ஒரு கோரிக்கையை வைத்ததால் மிருணாள் தாகூர் அந்த முடிவை எடுப்பாரா இல்லை பாலிவுட்டிலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதேசம்யாம் மிருணாளுக்கோ காதல் மீதெல்லாம் இப்போது ஆர்வமே இல்லை என்று தெரிகிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், "இப்போதைக்கு எனக்கு காதலிக்கவெல்லாம் நேரமில்லை" என சிம்ப்பிளாக முடித்துவிட்டார். இதன் மூலம் அவர் முழுக்க முழுக்க நடிப்பில்தான் கவனத்தை செலுத்தப்போகிறேன் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். இனியாவது அவரைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் வராமல் இருந்தால் சரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X