பிப்ரவரி 14ல் தனுஷுடன் திருமணமா?.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.. மேடம் இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ்; சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதனையடுத்து சிங்கிளாக இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாகவும்; பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து மிருணாள் தாகூர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் சிறந்த நடிகரான தனுஷுக்கும்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நல்லபடியாகத்தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இடையில் ஏற்பட்ட சின்ன சின்ன மனஸ்தாபங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.
கோ பேரண்ட்டிங் முறையில்: இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் பெரிய் அதிர்ச்சியை கொடுத்தது. மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட சூழலில் இந்த பிரிவு தேவைதானா எனவும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் பிடிக்காமல் சேர்ந்திருப்பதைவிடவும், பிரிந்துவிடுவதே உத்தமம். அதை அவர்கள் செய்துவிட்டார்கள். தாங்கள் பிரிந்தாலும் மகன்கள் விஷயத்தில் இருவருமே அக்கறையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் மகன்களை வளர்க்கிறார்கள்.

பரவிய வதந்தி: ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு தனுஷ் சிங்கிளாக காலத்தை நகர்த்திவருகிறார். ஆனால் அவருக்கு அவரது வீட்டில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் பரவியது. இதுவரை அப்படி எதுவும் வரவில்லை. அதேசமயம் அவரும் நடிகை மிருணாள் தாகூரும் தீவிரமாக காதலித்துவருகிறார்கள் எனவும் ஒரு பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.
யூகித்த ரசிகர்கள்: அதாவது இரண்டு பேரும் சேர்ந்து சில பார்ட்டிகளில் கலந்துகொண்டார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் கமெண்ட்ஸும் செய்துகொள்கிறார்கல். மேலும் தனுஷின் சகோதரிகளையும் மிருணாள் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கிறார். இதையெல்லாம் வைத்து இரண்டு பேரும் காதலிக்கிறார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் குரல்கள் கேட்டன. அதற்கு இதுவரை இரண்டு பேருமே எதுவும் ரெஸ்பான்ஸ் செய்யாமல் மௌனம் காத்து வந்தார்கள். இந்நிலையில் மிருணாள் தாகூர் மௌனம் கலைத்திருக்கிறார்.
மிருணாள் சொன்னது: அவர் சமீபத்தில் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேனா?. இல்லவே இல்லை. பிப்ரவரி 14ஆம் தேதி ஏப்ரல் ஒன்றாம் தேதி மாதிரி மாறியிருக்கிறது. எனக்கு திருமணம் என்று யார் ஆரம்பித்தது என தெரியவில்லை. இது இப்போது ரொம்பவே பயம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. மிருணாள் தாகூர் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை உறுதி செய்துவிட்டார் என்றெல்லாம் பொய்யாக வதந்தி பரப்புகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











