Mrunal Thakur: ராஷ்மிகாவை விட ஜாஸ்தி.. ஒரே படத்தால் உச்சத்துக்கு சென்ற மிருணாள் தாகூரின் சம்பளம்?

சென்னை: சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் தான் தற்போது கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

சீதா ராமம் படத்தில் தனது அழகாலும் அசத்தல் நடிப்பாலும் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மிருணாள் தாகூர் தற்போது நானியின் 30வது படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், பாலிவுட்டிலும் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை ஏற்றி விட்டார் மிருணாள் தாகூர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mrunal Thakur gets a huge salary and beats Rashmika Mandanna

மிரட்டும் மிருணாள் தாகூர்: மராத்தி நடிகையான மிருணாள் தாகூர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்த நிலையில் தான் அவருக்கு இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் இமிடியேட்டாக கிடைத்தனர்.

அதில், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களே ரசிகர்களாக மாறியிருப்பது தான் மிருணாள் தாகூருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறி உள்ளது.

Mrunal Thakur gets a huge salary and beats Rashmika Mandanna

ராஷ்மிகாவை விட அதிகம்: சீதா ராமம் படத்தில் மிருணாள் தாகூர் நடித்திருந்தாலும் அந்த படத்தில் அவரை விட ராஷ்மிகாவுக்குத் தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டது. ஏனென்றால் அப்போது மிருணாள் தாகூருக்கு பெரியளவில் மார்க்கெட்டே இல்லை. ஆனால், சீதா ராமம் படத்தின் வெற்றிக்கே மிருணாள் தாகூர் தான் காரணமான நிலையில், தற்போது அதிரடியாக ராஷ்மிகா மந்தனாவை விட அதிக சம்பளம் மிருணாள் தாகூர் வாங்குவதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீதா ராமம் படத்தில் ராஷ்மிகாவுக்கு 4 கோடி சம்பளமும் மிருணாள் தாகூருக்கு 2 கோடி சம்பளமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 3 மடங்காக சம்பளத்தை மிருணாள் தாகூர் உயர்த்தி விட்டாராம்.

Mrunal Thakur gets a huge salary and beats Rashmika Mandanna

6 கோடி சம்பளம்: பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், சட்டென மிருணாள் தாகூரை தனது படத்தில் புக் செய்து இருக்கிறார் நானி. இந்நிலையில், நானியின் 30வது படத்தில் அதிகபட்சமாக மிருணாள் தாகூருக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

அக்‌ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் ஒரே ஒரு ஐட்டம் சாங்குக்கு மிருணாள் தாகூர் டான்ஸ் ஆடியதற்கே 1 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நானி படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். ராஷ்மிகா, சமந்தாவை எல்லாம் இப்படி அதிரடியாக மிஞ்சி விட்டாரே என சினிமா வட்டாரத்தில் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X