திரிஷா, சமந்தாவுக்கு சேலை கட்டி விட்ட திவ்யன் ஜெயரூபன்.. இப்போ மிருணாள் தாக்கூருடன் செம போஸ்!

சென்னை: ஒரு காலத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லேடன் த்ரிஷா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஃபேவரைட் நபராக இருந்தார். சமீப காலமாக அந்த இடத்தை நடிகைகளுக்கு சேலை கட்டிவிடும் சாரி டிராப்பிஸ்ட்டான திவ்யன் ஜெயரூபன் பிடித்துள்ளார் என்று தான் தோன்றுகிறது.

பல முன்னணி நடிகைகள் மற்றும் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள், பாடகிகள் என திரையுலக பெண்கள் எல்லாம் தங்கள் சேலைகளை அழகாக திவ்யன் ஜெயரூபன் கட்டிவிடுவார் என அவரை சாரி டிராப்பிஸ்ட்டாக சில நிகழ்ச்சிகளுக்கு நியமித்து வருகின்றனர்.

Mrunal Thakur gives super pose with Saree Drappist Thivyan Jayareuben
Photo Credit:

சினேகா சமீபத்தில் டபுள் டிராப் சேலையை அணிந்துக் கொண்டு மாஸ் காட்டினாரே அவருக்கு திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டி விட்டு அழகு பார்த்தார். இந்நிலையில், தற்போது நடிகை மிருணாள் தாக்கூருடன் திவ்யன் ஜெயரூபன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

சினேகாவுக்கு சேலை கட்டிவிட்ட பிரபலம்: நடிகை சினேகாவுக்கு ஆடை வடிவமைப்பாளர் திவ்யன் ஜெயரூபன் பட்டுச் சேலை கட்டிவிடும் வீடியோ வைரலானது. தளபதி விஜய்யின் "கோட்" படத்திற்குப் பிறகு ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினேகா, தனது துணிக்கடை வியாபாரத்தையும் பெருக்கி வருகிறார். சமீபத்திய நிகழ்வொன்றில் சினேகா "ராஜமாதா" தோற்றத்தில் ஜொலித்தது பலரையும் கவர்ந்தது.

"மார்வலஸ் மார்கழி" ராம்ப்வாக் நிகழ்ச்சியில், சினேகாவுக்கு "டபுள் டிராப்" சேலையை திவ்யன் ஜெயரூபன் கட்டினார். இந்த வீடியோவை சினேகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது கணவர் பிரசன்னாவுடன் பட்டுப்புடவையில் பங்கேற்ற சினேகா, நிகழ்ச்சிக்கு தயாரானதும் திவ்யனை அன்புடன் தழுவிப் பாராட்டியது ரசிகர்களைக் கவர்ந்தது.

த்ரிஷா முதல் சமந்தா வரை: சினேகா மட்டுமல்லாமல், த்ரிஷா, விஜே பிரியங்கா, சமந்தா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் திவ்யன் ஜெயரூபன் ஆடை அலங்காரம் செய்கிறார். பெரிய நிகழ்வுகளில் பிரபலங்கள் பங்கேற்கும் போது, இவரே அவர்களுக்கு சேலை அணிவிக்கிறார். சமீபத்தில், விஜே பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, அவருக்கும் இவர் சேலை கட்டிய வீடியோக்கள் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. பாடகி சின்மயி உள்ளிட்டோருக்கும் இவர் சேலை கட்டிவிட்டு அவர்களை அழகாக காட்டியுள்ளார்.

மிருணாள் தாக்கூருடன்: நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என்கிற வதந்தி காரணமாக நாடு முழுவதும் சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாக்கூர் அதிகம் பிரபலமானார். இந்நிலையில், மிருணாள் தாக்கூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் அவரது ஆடைக்காக உழைத்த திவ்யன் ஜெயரூபன் தோளில் சாய்ந்து செம போஸ் கொடுத்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X