தனுஷ் - மிருணாள் தாகூருக்கு இடையே என்ன உறவு?.. முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்.. வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்
சென்னை: தனுஷும் மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாகவும் இப்போதுதான் அவர்கள் ரிலேஷன்ஷிப்புக்குள் சென்றிருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. இரண்டு பேருக்கும் திருமணம்தான் என்று ரசிகர்களும், திரைத்துறையில் ஒருதரப்பினர் அடித்து கூற ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மிருணாள் விளக்கமளித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த தனுஷ்; சில காரணங்களால் அவரை பிரிந்தார். கடந்த வருடம்தான் இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் முயன்றாலும் இவர்கள் பிடி கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில் ரஜினிக்கு ரொம்பவே மன உளைச்சல் என்று போயஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ரிலேஷன்ஷிப்?: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் சிங்கிளாக இருந்துவருகிறார். அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் பாலிவுட், கோலிவுட்டில் தீயாக பரவிவருகிறது. அதாவது, தனுஷும் மிருணாள் தாகூரும் காதலிக்கிறார்கள். இப்போது அடிக்கடி டேட்டிங் செய்துவருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

நிறைய சந்திப்புகள்: தேரே இஷ்க் மெய்ன் பட பார்ட்டியில்கூட மிருணாள் கலந்துகொண்டார். அதேபோல் இதர பார்ட்டிகள், விழாக்களில் அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்து அடிக்கடி பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி இத்தனை நாட்கள் தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யாமல் இருந்த மிருணாள் இந்தக் கிசுகிசு வந்ததும் ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். இதையெல்லாம் வைத்துதான் அவர்கள் காதலிக்கிறார்கள் என உறுதியாக கூறினார்கள் ஒருதரப்பினர்.
மிருணாளின் விளக்கம்: இந்நிலையில் இந்த விஷயம் குறித்து மிருணாள் தாகூர் விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரையும் இணைத்து சமீபமாக பரவி வரும் வதந்திகள் குறித்து எனக்கு தெரியும். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. சன் ஆஃப் சர்தார் 2 நிகழ்வில் தனுஷும் கலந்துகொண்டார். அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அவர்தான் அழைத்தார்: அஜய் தேவ்கன்தான் அந்த நிகழ்வுக்கு தனுஷை அழைத்து வந்தார். அதில் இரண்டு பேரும் கலந்துகொண்டதால்தன் இப்படி இணைத்து பேசுகிறார்கள்" என்றார். இதன் காரணமாக இந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது. தனுஷின் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











