விவகாரமான படத்தில் நடித்துவிட்டு கோடியில் சம்பளம் கேட்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகை!
சென்னை: நடிகை மிருணாள் தாகூர் லஸ்ட் ஸ்டோரீஸில் நடித்து விட்டு தனது தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராத்திய நடிகையான மிருணாள் தாகூர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்த நிலையில் தான் அவருக்கு இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

மிரணாள் தாகூர்: ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக மிரணாள் தாகூர் நடித்திருந்தார்.இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி சும்மா பக்காவாக இருந்தது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படம் அனைத்து மொழியிலும் சக்கைபோடு போட்டது. சீதா ராமம் படத்திற்கு பிளஸை மிரணாள் தாகூர் தான் என்றே போதும், இதில் நடித்த ராஷ்மிகாவுக்கு 4 கோடி சம்பளமும் மிருணாள் தாகூருக்கு 2 கோடி சம்பளமும் வழங்கப்பட்டது.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி தொடரில் விவகாரமான கதையில் நடித்துள்ளார். அதாவது திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என்ற கதையில் பல கசமுசா காட்சியிலும் நடித்திருந்தார்.

3 மடங்கு சம்பளம் உயர்வு: லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மூலம் பிரபலமடைந்த மிருணாளி தாகூருக்கு தற்போது பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதால், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். சீதாராம் படத்திற்காக மிருணாள் ரூ.85 லட்சம் சம்பளம் வாங்கினார். இந்தப் படம் ஹிட் ஆன பிறகு ஒரு படத்துக்கு ரூ.2 கோடியாக உயர்த்தினார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெற்றியைத் தொடர்ந்து மிருணாள் தாகூர் மீண்டும் தனது சம்பளத்தை 3 மடங்கு உயர்த்தி உள்ளார்.
அடுத்தடுத்த படங்களில்: நானியின் 30வது படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாளி தாகூர் நடித்து வருகிறார். அதே போல பாலிவுட்டில் பாப்பி என்ற படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.மேலும், விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்திலும் மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











