வெளியேறிய ஸ்ருதிஹாசன்.. அசால்ட்டாக உள்ளே நுழைந்த மிருணாள் தாகூர்.. மெகா ஜாக்பாட் தான் போங்க!
ஹைதராபாத்: அறிமுக இயக்குநர் ஷானேய்ல் தியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் டக்காய்ட். முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், திடீரென அவர் படத்திலிருந்து விலகியதும் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் டக்காய்ட் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்த நிலையில், விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.

கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட ஹிட் படமான சலார் படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் 2ம் பாகத்திலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் கமிட்டாகி இருந்த டக்காய்ட் படத்தில் இருந்து அவர் வெளியேறியது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சாந்தனுவுடன் பிரேக்கப்: கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ஒரு வெளிநாட்டவரை காதலித்து பிரேக்கப் செய்த நிலையில், சில ஆண்டுகள் சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்தார். சாந்தனு ஹசாரிகா எனும் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட்டை காதலிக்கத் தொடங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியானார். ஆனால், திடீரென அவருடனும் பிரேக்கப் நடந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை ஸ்ருதிஹாசன் தவிர்த்து வருகிறாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
மிருணாள் தாகூருக்கு அடித்த ஜாக்பாட்: பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஆத்வி சேஷ் நடித்து வரும் டக்காய்ட் படத்தில் ஸ்ருதிஹாசன் விலகிய நிலையில், அவருக்கு பதில் தற்போது சீதா ராமம், ஹாய் நான்னா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மிருணாள் தாகூர் நடித்த ஃபேமிலி மேன் திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் கேமியோ ரோலில் மட்டும் நடித்திருந்தார் மிருணாள் தாகூர்.
அடுத்து பிரபாஸ் படம்?: அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கி இந்தியாவையே அதிர வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் அடுத்து பிரபாஸ் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்திலும் மிருணாள் தாகூர் தான் ஹீரோயின் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து பெரிய படங்களை புக் செய்து வருகிறார் மிருணாள் தாகூர் என்கின்றனர்.
மிருணாள் தாகூர் சம்பளம்: நடிகை மிருணாள் தாகூர் ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபாஸின் படத்துக்கு 5 கோடி ரூபாய் மேல் அவருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டக்காய்ட் படத்தில் நடிக்க 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் அதிகபட்சமாக இவருக்கு 13 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய இடத்தை இவர் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











