மிருணாள் தாகூருக்கு வந்த திருமண அப்ரோச்.. பப்ளிக்காவே சொல்லிட்டாங்க ப்பா.. நடக்குமா?

சென்னை: சீதா ராமம் படத்தில் நடித்து புகழடைந்த மிருணாள் தாகூர் இப்போது பான் இந்தியா ஹீரோயினாக ஜொலித்துவருகிறார். அதிகம் அவரது கவனம் ஹிந்தியில் இருந்தது. இப்போது தென்னிந்திய திரையுலகத்தில் கவனம் திரும்பியிருக்கிறது. அந்தவகையில் அவர் நடிப்பில் டக்கோயிட் படம் உருவாகியிருக்கிறது. இப்படமானது சமீபத்தில்தான் வெளியானது. படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

மகராஷ்டிராவில் பிறந்த மிருணாள் தாகூர் மராத்தி திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அதனையடுத்து ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவருக்கு சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அப்படத்திலிருந்து மிருணாளுக்கென்று தனியாக ரசிகர்களும் உருவானார்கள். அந்தப் படத்தின் வெற்றியால் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது கவனம் முழுக்க முழுக்க ஹிந்தியில் சென்றது.

Mrunal Thakur Marriage Talk Goes Viral After Dacoit Release Allu Aravind s Comment Trends
Photo Credit:

ஹிந்தியில் செம பிஸி: அதன்படி கும்ரா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2, பிப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் அவருக்கான மார்க்கெட்டை அதிகப்படுத்தின. தொடர்ந்து தெலுங்கில் Hi Nanna, கல்கி 2898 ஏடி, தி ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்களிலும் நடித்தார். அவர் ஹிந்தி, தெலுங்கில் பிஸியாக இருந்தாலும் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. விரைவில் அவர் நடிக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயம் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ராக்கா படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம்.

டக்கோயிட்: சூழல் இப்படி இருக்க தெலுங்கில் அவர் நடிப்பில் சமீபத்தில் டக்கோயிட் திரைப்படம் வெளியானது. அப்படத்தில் அதிவி சேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷானெயில் டியோ படத்தை இஅய்க்கியிருக்கிறார். ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸான இப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. வசூலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் நடிகை மிருணாள் தாகூரிடம் திருமணம் குறித்து ஓபனாக பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

திருமணம் பற்றிய பேச்சு: அவர் மேடையில் பேசுகையில், "எங்களுக்கு நீங்கள் வேண்டும். உங்களை இங்கேயே கட்டிப்போட வேண்டுமென்றால் தெலுங்கு திரைப்பட துறையிலிருந்தே ஒருவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் எனது ஆசை. அதற்கு எனது ஆசீர்வாதமும்கூட" என்று குறிப்பிட்டார். அதனை கேட்டு மிருணாள் தாகூர் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ இந்த திருமண அப்ரோச்சை மிருணாள் ஏற்றுக்கொள்வாரா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

தனுஷுடன் கிசுகிசு: முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிசுகிசு பரவியது. அதாவது தனுஷும், மிருணாள் தாகூரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. அந்த கிசுகிசுவுக்கு பெட்ரோல் ஊற்றும்படியாக தனுஷும், மிருணாளும் சில பார்ட்டிகளில் ஒன்றாக கலந்துகொண்டார்கள். அதை வைத்து இதை உறுதி செய்தார்கள். ஆனால் அதெல்லாம் இல்லை வெறும் வதந்திதான். எனக்கு தனுஷை பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக மிருணாள் முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X