Mrunal Thakur: ”அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பம்..” லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நாயகியின் விபரீத ஆசை!

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான சீதா ராமம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவர் மிருணாள் தாகூர். தொடர்ந்து நானியுடன் ஹாய் நன்னா படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், தான் நடிக்க விரும்பும் படங்கள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிருணாள் தாகூரின் தீராத ஆசை
மராத்தி மொழியில் வெளியான ஹலோ நந்தன், விட்டி தண்டு, சுராஜ்யா ஆகிய படங்கள் மூலம் சினிமாவில் என்ட்ரியானவர் மிருணாள் தாகூர். தொடர்ந்து இந்தியிலும் தடம் பதித்த அவர், லவ் சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், தமக்கா, ஜெர்ஸி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். ஆனாலும் மிருணாள் தாகூருக்கு மிகப் பெரிய சக்சஸ் கொடுத்தது சீதா ராமம் திரைப்படம் தான்.

 Mrunal Thakur: Mrunal Thakur has expressed her desire to act in romantic films in Bollywood

2022ம் ஆண்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான சீதா ராமம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த மிருணாள் தாகூர், காதலில் உருகி உருகி நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நானியுடன் ஹாய் நன்னா படத்திலும் மிருணாள் தாகூரின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விரைவில் தமிழிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ரெடியாகிவிட்டார் மிருணாள் தாகூர்.

இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் பங்கேற்ற மிருணாள் தாகூர், இந்தி படங்களில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது இந்தியில் காதல் பின்னணியில் உருவாகும் ரொமான்ஸ் மூவிகளில் நடிக்க விருப்பம் உள்ளது. இதுவரை எனக்கு அந்த மாதிரியான படங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. ஒருவேளை காதல் கதைகளில் நடிக்கும் அளவிற்கு நான் பிரபலமாகவில்லையோ என கவலை தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்திருந்தார் மிருணாள் தாகூர். ஆந்தாலஜி ஜானரில் உருவான இந்தப் படத்தில், பால்கி இயக்கிய போர்ஷனில் மிருணாள் தாகூர் தான் நாயகி. இந்த கதை முழுவதுமே மிருணாள் தாகூர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பியிருந்தார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெளியான பின்னர் மிருணாளின் தாராள மனதை பார்த்து பாலிவுட் திரையுலகே திணறிவிட்டது.

நிலைமை இப்படி இருக்கும் போது, பாலிவுட்டில் காதல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என மிருணாள் தாகூர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் க்ளாமராக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார் மிருணாள் தாகூர். இந்நிலையில், இப்போது நேரிடையாகவே இந்தியில் காதல் படங்களில் நடிக்க சான்ஸ் கேட்டுள்ளது பல பாலிவுட் இயக்குநர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X