கூச்சப்பட்டதே இல்லை.. முதல் முறையா அந்த D டைரக்டர் கிட்டத்தான் சான்ஸ் கேட்டேன் - மிருணாள் தாக்கூர்!

சென்னை: 33 வயதாகும் நடிகை மிருணாள் தாக்கூர் 2012ம் ஆண்டு முதலே சின்னத்திரை, சினிமா என நடிகையாக மாறிவிட்டார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக போராடி வரும் தான் எந்தவொரு சூழ்நிலையிலும் வாய்ப்புக் கேட்பதற்காக கூச்சப்பட்டதே இல்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

டயானா மரியம் குரியனாக மலையாள சேனலில் ஆங்கராக இருந்தவர் தான் லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்பது அனைவருக்கும் தெரியும். சாதாரண கண்டக்டர் சிவாஜி ராவ் தான் சூப்பர் ஸ்டாராக மாறினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து தூள் கிளப்பிய சிவகார்த்திகேயனிடம் தான் விஜய் துப்பாக்கியே கொடுத்தார்.

Mrunal Thakur opens up how she initially approached Dhurandhar Director
Photo Credit:

நெப்போ கிட்ஸ்களுக்கு எளிதில் வாய்ப்புக் கிடைத்து விட்டாலும் அவர்களை விட கஷ்டப்படும் இடத்தில் இருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் என்றுமே மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். நடிகை மிருணாள் தாக்கூர் தான் முதன் முதலாக பிரபல D டைரக்டரிடம் தான் வாய்ப்புக் கேட்டு சென்றதாக மனம் திறந்து பேசியுள்ளார்.

தனுஷால் கிடைத்த பப்ளிசிட்டி: பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான தேரே இஷ்க் மே படத்தின் விழாவில் பங்கேற்ற போது தான் தனுஷை சந்தித்தேன். அவருடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தன்னை தற்போது இந்தியா முழுவதும் ரசிகர்கள் அறிந்து விட்டனர் என்றும் இப்படியொரு பப்ளிசிட்டி கிடைக்க நான் 10 கோடி கொடுத்தாலும் கிடைத்திருக்காது என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

Mrunal Thakur opens up how she initially approached Dhurandhar Director
Photo Credit:

முதல் முதலில் வாய்ப்புக் கேட்ட இயக்குநர்: 2012ம் ஆண்டு 'Mujhse Kuchh Kehti...Yeh Khamoshiyaan' எனும் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கிய மிருணாள் தாக்கூர் 2014ம் ஆண்டு ஹலோ நந்தன் எனும் மராத்தி படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமானார். இந்தியில் 2018ம் ஆண்டு வெளியான லவ் சோனியா படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். முதன் முதலில் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டு தான் சென்றதே துரந்தர் படத்தை இயக்கி மெகா பிளாக்பஸ்டர் கொடுத்துள்ள ஆதித்யா தர்-ரிடம் தான் என நடிகை மிருணாள் தாக்கூர் மனம் திறந்து பேசியுள்ளார். ஆனால், அப்போது அவரிடம் எப்படி வாய்ப்பு கேட்பது என எனக்கு சரியாக தெரியாத நிலையில், அவர் இயக்கத்தில் நடிப்பது மிஸ் ஆனது. ஆனால், சமீபத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்புக் கிடைத்த போது, அந்த முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டேன் என்றார்.

பெரிய போராட்டம்: சினிமாவில் ஈஸியாக எல்லாம் நடிகையாகவோ டாப் ஹீரோயினாகவோ ஆகிவிட முடியாது. அதற்காக கடந்த 15 ஆண்டுகளில் பெரிய போராட்டத்தையே சந்தித்துள்ளேன். ஆனால், யாரை பார்த்தாலும், கொஞ்சம் கூட கூச்சமே படாமல் என்னுடைய முகத்தைக் காட்டி, "சார் நான் நல்லா நடிப்பேன், எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்க" எனக் கேட்டு விடுவேன் என செம வெளிப்படையாக நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். Do Deewane Seher Mein திரைப்படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகிறது. சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து செம ரொமாண்டிக்காக மிருணாள் தாக்கூர் நடித்துள்ள இந்த படம் கண்டிப்பாக காதலர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X