10 கோடி கொடுத்தாலும்.. தனுஷ் உடன் இந்நேரம் எனக்கு கல்யாணமே ஆகியிருக்கும்.. மிருணாள் தாக்கூர் ஓபன்!

சென்னை: 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்தளவுக்குத் தனக்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது என நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷுக்கும் மிருணாள் தாக்கூருக்கும் காதலர் தினத்தன்று திருமணம் என வதந்தி ஒன்று கிளம்பி பூதாகரமாக வெடித்தது.

பாலிவுட் மீடியாக்கள் சில அந்த செய்தியை வெளியிட கோலிவுட்டிலும் அதன் தாக்கம் பெரிதளவில் எதிரொலித்தது. விரைவில் வெளியாகவுள்ள தனது படத்துக்கு அந்த பப்ளிசிட்டியை சைலன்ட்டாக பயன்படுத்திக் கொள்ளாமல் தனுஷ் உடன் திருமணம் என்பது முற்றிலும் வதந்தி என போட்டு உடைத்து விட்டார்.

Mrunal Thakur opens up if she didn t get this much publicity even spends 10 Crore Rupees too
Photo Credit:

ஆனால், அதே சமயம் தனுஷ் உடன் தன்னை இணைத்து பரவிய வதந்திகளுக்கு நன்றி தெரிவித்து அவர் அடிபொலியாக பேசியிருப்பது தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும்: "எனக்கும் தனுஷுக்கும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என வதந்திகளை எப்படித்தான் பரப்பினார்கள் என தெரியவில்லை. அவர்களின் கூற்றுப்படி எங்களுக்கு இந்நேரம் திருமணம் ஆகியிருக்கும். ஆக்சுவலா நான் அவரோட தேரே இஷ்க் மே படத்தின் நிகழ்ச்சிக்கு சென்ற போது இருவரும் சந்தித்துப் பேசிய காட்சிகளை வைத்து இப்படி வதந்திகளை பரப்பி விட்டனர் என சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நடிகை மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்.

10 கோடி கொடுத்தாலும்: "எனக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் பிஆர் டீம் எதுவும் இல்லை. என்னோட வீட்டு அட்ரெஸ் கூட இப்போ பப்ளிக்கா மாறிடுச்சு, அதையெல்லாம் சரி செய்வதற்காக ஒரு பிஆர் டீமை விரைவில் அமைக்க யோசித்துக் கொண்டிருக்கிறேன். சத்தியமா சொல்றேன் 3 கோடி, 6 கோடி, ஏன் அதிகபட்சம் 10 கோடி கொடுத்தாலும் இப்படியொரு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. தனுஷுடன் இணைத்து வதந்தி பரப்பியவர்களுக்கு உண்மையாகவே நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன் என செம கலகலப்பாக பேசியுள்ளார். மிருணாள் தாக்கூர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள o Deewane Seher Mein திரைப்படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகிறது. அடுத்த மாதம் தெலுங்கில் அவர் நடித்த டக்காயிட் திரைப்படமும் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X