தனுஷுடன் நான்.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.. இவ்வளவு பில்ட் அப் கொடுக்குறாங்களே ப்பா
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ்; சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார். அவரை பிரிந்த பிறகு நடிகை மிருணாள் தாகூரும், தனுஷும் காதலிப்பதாகவும்; இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷ் பற்றி மிருணாள் தாகூர் சமீபத்தில் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து ஒரு நடிகர் பாலிவுட்டுக்கு சென்று அங்கே வரிசையாக படங்கள் நடிப்பதில் தனுஷ் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். கோலிவுட்டில் எப்படி சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாரோ அதேபோல் பாலிவுட்டிலும் தன்னுடைய தடத்தை ஆழமாகவே பதித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை; நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த்கொண்டார். இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை திடீரென சிக்கலை சந்தித்து; சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. அந்த டைவர்ஸுக்கு பலரும் பல காரணங்களை சொன்னாலும்; சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக கடந்து சென்றுவிட்டார்கள்.
மிருணாளுடன் காதல் கிசுகிசு: ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு சிங்கிளாக இருக்கிறார் தனுஷ். சூழல் இப்படி இருக்க அவரும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாகவும்; இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் பரவினர். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் எந்த ரியாக்ட்டும் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் தொடர்ந்து இந்தத் தகவல் பரவிக்கொண்டே இருந்ததன் காரணமாக; இனிமேலும் விட்டால் இது சரியாக இருக்காது என்பதை முடிவு செய்து மனம் திறந்தார் மிருணாள்.
என்ன சொன்னார்?: அவர் ஒரு பேட்டியில், "எனக்கென இதுவரை நான் தனியார் பி.ஆர் டீம் வைத்துக்கொண்டதில்லை. இனிமேல் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். பத்து கோடி ரூபாய் செலவு செய்திருந்தால் கூட எனக்கு இந்த அளவுக்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. இல்லாதவற்றை பேசி இருப்பது போல் பேசி என்னை பெரிய ஆளாக்கிவிட்டார்கள்" என கூறியிருந்தார். இதன் காரணமாக தனுஷ் - மிருணாள் காதல் மற்றும் திருமண கிசுகிசு முடிவுக்கு வந்தது.
மிருணாள் பேட்டி: இந்நிலையில் தனுஷ் குறித்து மீண்டும் பேசியிருக்கும் மிருணாள், "ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் படங்களை பார்த்த பிறகு தனுஷின் ரசிகையாகிவிட்டேன். அசுரன் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அற்புதமான நடிகர், பாடலாசிரியர், பாடகர், நடன கலைஞர், இயக்குநர். தேரே இஷ்க் மெய்ன் பட்த்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் நான், 'நீங்கள் சன் ஆஃப் சர்தார் 2 ஸ்கிரீனிங்குக்கு வர முடியமா?' என கேட்டேன். அவர் உண்மையிலேயே வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எனது வாழ்க்கையில் அது இனிமையான தருணம். ஒருநாள் அவருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை" என்றார்.


Click it and Unblock the Notifications











