தனுஷை வைத்து கல்லா கட்ட பார்த்த மிருணாள் தாக்கூர்.. கடைசியில் இத்தனை கோடி நஷ்டமா?.. என்ன ஆச்சு?

மும்பை: சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான 'டூ தீவானே ஷெஹர் மேன்' (Do Deewane Sheher Mein) திரைப்படம், முதல் வார இறுதியில் ₹4 கோடி வசூலை ஈட்டி, மந்தமான தொடக்கம் பெற்றது. மூன்றாம் நாளில் ₹1.35 கோடி வசூல், இது இரண்டாம் நாள் வசூலை விட சுமார் 10% சரிவு ஆகும்.

சீதா ராமம் படத்துக்குப் பிறகு மிருணாள் தாக்கூர் இந்தியளவில் டிரெண்டானாலும் தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் எல்லாம் பக்கா ஃபிளாப் ஆக மாறி வருகின்றன. நானியுடன் அவர் இணைந்து நடித்த ஹை நான்னா திரைப்படம் ஓரளவுக்கு ஓடியது.

Mrunal Thakur recent bollywood movie Do Deewane Sheher Mein struggle at Box Office

ஆனால், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் பெரிய பல்பு வாங்கியது. அந்த படத்துக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. தொடர்ந்து இந்தியில் இவரும் மாளவிகா மோகனன் மற்றும் பூஜா ஹெக்டே போல ஹிட் படத்துக்காக போராடி வருகிறார்.

தனுஷை வைத்து பப்ளிசிட்டி: நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில பாலிவுட் மீடியாக்கள் கிளப்பி விட்ட வதந்தி அப்படியே காட்டுத் தீ போல பரவி இந்தியா முழுவதும் அவருக்கு பப்ளிசிட்டி வாங்கிக் கொடுத்தது. 10 கோடி கொடுத்தாலும் இப்படியொரு பப்ளிசிட்டி தனக்கு கிடைத்திருக்காது என அவரே பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில், அவரது படம் வெளியான பிறகு, திட்டமிட்டே தனுஷ் பெயரை இவரே பிஆர் வைத்து பயன்படுத்தினாரா? என பாலிவுட் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

படம் ஓடவில்லை: PVR INOX திரையரங்குகளில் வழங்கப்பட்ட சலுகைகள் முதல் நாள் வசூலை உயர்த்தியிருக்கலாம். இரண்டாம் நாளில் அங்கு குறைந்தாலும், மற்ற இடங்களில் 40-50% வளர்ச்சி காணப்பட்டது. ஆனால், மிருணாள் தாக்கூரின் புதிய இந்தி படம் பாலிவுட்டில் படுத்தே விட்டது.

முதல் நாளில் ₹1.20 கோடி, இரண்டாம் நாளில் ₹1.45 கோடி, மூன்றாம் நாளில் (மதிப்பீடு) ₹1.35 கோடி என மொத்தம் ₹4 கோடி வசூலாகியுள்ளது. 'துரந்தர்' மற்றும் 'டாக்ஸிக்' போன்ற பெரிய படங்கள் வெளிவரும் வரை அடுத்த சில வாரங்களுக்கு இப்படம் ஓடினால் தான் கொஞ்சமாவது வசூல் கிடைக்கும்.

பல கோடி நஷ்டம்: சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து, ரவி உதியாவர் இயக்கியுள்ள 'டூ தீவானே ஷெஹர் மேன்', குறைபாடுகள் கொண்ட ஒரு ஜோடியின் காதல் கதை. இதில் ஒருவர் உச்சரிப்பு சிக்கல் உடையவராகவும், மற்றொருவர் உலகை மாற்ற முயற்சிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலா அருண், ஜாய் சென்குப்தா, ஆயிஷா ரஸா, சந்தீபா தர், நவீன் கௌசிக் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 30 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டில் உருவான இந்த படம் 10 கோடி வசூலையாவது பெறுமா? என்பதே சந்தேகமாக உள்ளது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X