தனுஷுடன் காதல் கிசுகிசுவா?.. அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. மிருணாள் தாகூர் வேற லெவல்

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர் மிருணாள் தாகூர். அவரது அழகும்,திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாகவும்; இரண்டு பேரும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் ஓட ஆரம்பித்துள்ளன.

மராத்தி மொழியில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூர் தொடர்ந்து ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் தெலுங்கில் சீதாராமம் படத்தி நடித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டது. அதிலும் பெரிய வெற்றி கிடைத்தது. முக்கியமாக மிருணாள் தாகூருக்கென்று தனி ரசிகர் படையே உருவாக ஆரம்பித்தது.

Mrunal Thakur s Latest Post Fuels Dhanush Wedding Rumours Here are Details
Photo Credit:

பிஸியான நடிகை: சீதாராமம் பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்ததால் தென்னிந்திய மொழிகளில் அதீத கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கவனம் பாலிவுட்டிலேயே தொடர்ந்தது. அதன் பலனாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹிட்டோ, தோல்வியோ அவரது மார்க்கெட் சீராகவே இருக்கிறது என திரைத்துறையினர் சொல்கிறார்கள். தென்னிந்திய மொழிகளை பொறுத்தவரை அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

சிங்கிள் டூ மிங்கிள்?: இது ஒருபக்கம் இருக்க அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை சிங்கிளாகவே வெளியே காட்சி தருகிறார். ஆனால் சமீபமாக அவருக்கும், நடிகர் தனுஷுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி டேட்டிங் எல்லாம் செல்கிறார்கள் என்று பேசப்படுகிறது. மறுபக்கம் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் தனுஷுடனான கிசுகிசுதான் தொடர்ந்து பரவிவருகிறது. அதுமட்டுமின்றி தனுஷின் அக்காவையும் இன்ஸ்டாகிராமில் திடீரென்று ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளார்.

திருமணமா?: இதையெல்லாம் வைத்து அவர்களுக்கு திருமணம் நடப்பது உறுதிதான் என அனைவருமே சொல்கிறார்கள். ஆனால் மிருணாளோ அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய கரியரில் முழுக்க முழுக்க பார்வையை செலுத்தியிருக்கிறார். தனுஷும் இதுகுறித்து எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. அனைத்துக்கும் உச்சக்கட்டமாக இரண்டு பேருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாகவும் சில நாட்களாக தகவல் ஓடுகிறது.

மிருணாள் தாகூரின் ட்விட்டர் பதிவு: வழக்கம்போல் இந்த கிசுகிசுவுக்கும் இரண்டு பேரும் சைலெண்ட் மோடிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில் மிருணாள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார். அதாவது கடலில் கப்பலில் செல்லும்படியான காட்சிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. பின்னணியில் ஆய்த எழுத்து படத்தில் இடம்பெற்ற 'யாக்கை திரி' பாடலை ஒலிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X