Mrunal Thakur: எப்படி இருந்தாலும் பின்னாடி தான ஃபோகஸ் பண்ண போறீங்க.. மிருணாள் தாக்கூர் பளிச்!
மும்பை: நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் இந்த மாதம் வெளியான டக்கோயிட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை போல 50 கோடி வசூலை கடந்தது. ஆத்வி சேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான அந்த படம் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் வெளியானாலும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
அடுத்ததாக மிருணாள் தாக்கூர் தனுஷ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் காதலிக்கின்றனர் என கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் தனுஷ் உடன் காதலர் தினத்தன்று திருமணம் எல்லாம் செய்யவில்லை என வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மிருணாள் தாக்கூர் புகைப்படக்கலைஞர்களை சந்தித்து போஸ் கொடுத்தார். அப்போது சில புகைப்படக்கலைஞர்கள் வழக்கம் போல பேக் போஸ் கேட்க மிருணாள் தாக்கூர் மறுத்துவிட்டார்.
தனுஷ் இயக்கத்தில் மிருணாள் தாக்கூர்: நடிகர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இயக்குநராகவும் ப. பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என 4 படங்களை இதுவரை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், தற்போது டைரக்டராகவும் தனுஷ் தன்னை நிரூபிக்க மிருணாள் தாக்கூரை வைத்து புதிதாக படம் இயக்கப் போகிறார் என்கின்றனர். ஏற்கனவே தனுஷ் - மிருணாள் இடையே ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பிய நிலையில், இருவரும் இணைந்து பணியாற்றினால் மேலும், பரபரப்பு பற்றிக்கொள்ளும் என்கின்றனர்.
பின்னாடி தானே ஃபோகஸ் பண்ணுவீங்க: நடிகை மிருணாள் தாக்கூர் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சீதா ராமம் திரைப்படம் அவருக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. நானி உடன் நடித்த ஹாய் நான்னா திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ஃபேமிலி ஸ்டார் ஃப்ளாப் ஆக, சமீபத்தில் வெளியான டக்கோயிட் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர்கள் மிருணாளிடம் பேக் போஸ் கேட்க, நான் காட்ட மாட்டேன், ஆனால், நீங்க எப்படியும் அங்க தானே ஃபோகஸ் பண்ணுவீங்க என தக் ரிப்ளை கொடுத்துவிட்டுச் செல்ல, கேமராக்கள் அவரது பின்னழகை படம் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications