800 கோடி வசூல்.. சாவ்வா பட தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட்.. டிரான்ஸ்பரன்ட் உடையில் மிருணாள் தாகூர்!

மும்பை: விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான சாவ்வா திரைப்படம் இதுவரை உலகளவில் 800 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக மாறியுள்ளது. அந்த படத்தை தயாரித்த Maddock தயாரிப்பு நிறுவனம் நேற்று மும்பையில் பாலிவுட் நடிகர்களை அழைத்து பிரம்மாண்ட வெற்றி விழாவை நடத்தியுள்ளது.

அதில், அபிஷேக் பச்சன், விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், ஒட்டுமொத்த கவனத்தையும் நடிகை மிருணாள் தாகூர் டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து வந்து கவர்ந்துவிட்டார்.

Mrunal Thakur trending on social media after her Maddock Film Success party videos out

எக்ஸ் தளத்தில் #MrunalThakur ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வரக் காரணமே அந்த நிகழ்ச்சியில் மிருணாள் தாகூர் அணிந்து வந்த ஆடை தான் என்கின்றனர்.

சந்தோஷத்தில் சாவ்வா படக்குழு: சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் கதையை படமாக இயக்குநர் லக்‌ஷ்மன் உத்தேகர் இயக்கிய நிலையில், அந்த படம் இந்தியளவில் 53 நாட்களில் 598 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக Sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படத்துக்குப் பிறகு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக சாவ்வா மாறியுள்ளது. Maddock தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் பாலிவுட் பிரபலங்களை அழைத்து பிரம்மாண்ட பார்ட்டியை மாட்டாக் தயாரிப்பு நிறுவனம் நேற்று மும்பையில் நடத்தியது.

ராஷ்மிகா மந்தனா பங்கேற்பு: தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொண்டு கடற்கரை தீவில் நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், விஜய் தேவரகொண்டாவும் பீச் புகைப்படங்களை பதிவிட இருவரும் ஜோடியாகத்தான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் என்றும் இந்த பர்த்டேவுக்கு கூட அதிகாரப்பூர்வமாக காதலை அறிவிக்காமல் ரகசியம் காக்கிறாரே ராஷ்மிகா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வெற்றி விழாவில் பங்கேற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

மிருணாள் தாகூ தான் ஹைலைட்: ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அந்த நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியான கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் ஸ்லீவ் டிரெஸ் போட்டுக் கொண்டு மிருணாள் தாகூர் வந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பார்வை முழுவதுமே மிருணாள் தாகூர் பக்கம் சென்றுள்ளது.

டிரான்ஸ்பரன்ட் உடை: ஸ்லீவ்லெஸ் கருப்பு நிற உடையில், நெஞ்சு பகுதிக்கு கீழே வயிற்றுப் பகுதி முழுவதும் டிரான்ஸ்பரன்ட்டாக தெரியும்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கவுனை அணிந்துக் கொண்டு ராயல் பியூட்டியாக அந்த வெற்றி விழாவுக்கு மிருணாள் தாகூர் வந்துள்ளார். Maddock தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்தில் மிருணாள் தாகூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியளவில் டிரெண்டிங்: நேற்று இரவு முதல் இன்று காலை வரை இந்தியளவில் அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற வீடியோக்களையும் புகைப்படங்களை ஏகப்பட்ட எடிட் போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். #MrunalThakur ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், அவருக்கு பாலிவுட்டில் இருக்கும் கிரேஸ் தெளிவாக தெரிகிறது என்கின்றனர். சீதா ராமம் படத்துக்குப் பிறகு பெரிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டக்காய்ட் எனும் தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X