விஜய் எல்லாம் இல்லை.. அந்த கோலிவுட் நடிகருடன் தான் டான்ஸ் ஆடணுமாம்.. மிருணாள் தாகூரின் சாய்ஸ் அவரா?
சென்னை: மராத்தி நடிகையான மிருணாள் தாகூர் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் அவருக்கு நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்த படமென்றால் அது துல்கர் சல்மான் உடன் இணைந்து தெலுங்கில் அவர் நடித்த சீதா ராமம் படம் தான். அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவையே ஓவர்டேக் செய்துவிட்டு ரசிகர்கள் மத்தியில் பாப்புலரான மிருணாள் தாகூர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகளவில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
விரைவில் கோலிவுட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் மிருணாள் தாகூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்றும் யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும், யாருடன் சேர்ந்து நடனமாட வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் சேர்ந்து நடனமாட வேண்டும் என்கிற கேள்வியை நடிகைகளிடம் கேட்டால் தளபதி விஜய்யின் பெயரை பலரும் சொல்வார்கள். ஆனால், மிருணாள் தாகூரின் சாய்ஸ் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும்: சூர்யாவின் கங்குவா படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனிலேயே மிருணாள் தாகூர் தான் நடித்திருக்கிறார் என சில கட்டுக்கதைகள் வெளியாகின. அப்படி ஏதும் சிவா செய்திருந்தால் கூட படம் தப்பித்திருக்குமோ என்னமோ என்று எண்ணத்தான் தூண்டுகிறது. கல்கி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மிருணாள் தாகூர் அந்த படத்தில் வில்லனாக நடித்த கமல்ஹாசன் உடன் தான் தமிழில் நடிக்க வேண்டும் என்கிற பெரிய கொக்கியை போட்டிருக்கிறார்.

யாருடன் டான்ஸ் ஆட வேண்டும்?: மேலும், தொகுப்பாளினி யாருடன் நடனம் ஆட வேண்டும் என்கிற கேள்வியை அழுத்தி கேட்டும், அசராமல் கமல் சாருடன் தான் நடிக்க வேண்டும், அவருடன் தான் நடனமாட ஆசை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் நடிகை மிருணாள் தாகூர். தக் லைஃப் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் இவரையே ஹீரோயினாக புக் பண்ணிடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கமல் பொண்ணுக்கு பதிலாக: நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்து வந்த டக்காய்ட் திரைப்படத்தில் இருந்து திடீரென அவர் விலகிய நிலையில், அந்த படத்தில் ஆத்வி சேஷ் உடன் இணைந்து நடித்து வருவது மிருணாள் தாகூர் தான். ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் என தொடர்ந்து தெலுங்கில் நடித்து வரும் மிருணாள் தாகூரை சீக்கிரமே கோலிவுட்டுக்கு கூட்டிட்டு வாங்கப்பா என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











