ராம்சரண் மனைவி போல கருமுட்டையை ஃப்ரீஸ் பண்ணி வைக்கப் போறாராம் மிருணாள் தாகூர்.. ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்துள்ள மிருணாள் தாகூர் தனது கருமுட்டையை ஃப்ரீஸ் செய்து வைக்கப் போவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
31 வயதாகும் மிருணாள் தாகூர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மராத்தி மொழி படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானமிருணாள் தாகூர் 2018 ஆம் ஆண்டு லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்ததாக ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் 30 படத்தில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. நூர்ஜகான் கதாபாத்திரத்தில் ராயல் குடும்பத்து பெண்ணாக அப்படியே நடித்த அசத்தி இருந்தார்.
டோலிவுட்டில் பிசி: சீதாராமம் படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிவிட்டார். கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியான ஹாய் நானா படத்தில் யாஷ்னா கதாபாத்திரத்தில் பக்காவான நடிப்பை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து தெலுங்கில் வெற்றி படங்களை கொடுத்து வந்த மிருணாள் தாகூர் இந்த ஆண்டு விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் தோல்வியை தழுவியது.
கோலிவுட்டுக்கு வருவாரா?: தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர் நடிப்பில் அடுத்ததாக பூஜா மேரி ஜான் எனும் இந்தி படம் உருவாகி வருகிறது. தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் யுவர் கேன் யூ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருமுட்டையை பாதுகாக்க போகிறேன்: சினிமா பிரபலங்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் கருமுட்டைகளை உரிய வயதில் பாதுகாத்து 40 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் போது குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவை தற்போது எடுத்து வருகின்றனர். பல நடிகைகள் அப்படி செய்யாத காரணத்தினால், வயதான நிலையில் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு குழந்தை பேறு இல்லாத நிலை உருவாகிறது. மேலும், வாடகைத்தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்ளும் முடிவுக்குச் செல்கின்றனர்.
ராம்சரண் மனைவி: டோலிவுட் நடிகர் ராம்சரனின் மனைவி உபாசனாவும் இதேபோல் தான் தனது கரு முட்டைகளை ஃப்ரீஸ் செய்து வைத்திருந்தார். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாதுகாத்து வைத்த கருமுட்டைகளை பயன்படுத்தி பெண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டார். அதே போன்ற முடிவை எடுக்க 31 வயதாகும் நடிகை மிருணாள் தாகூரும் தற்போது முடிவு செய்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











