ராஷ்மிகா மந்தனா திருமணத்துக்கு வந்த நம்பர் 1 பணக்காரர்.. குடும்பத்தோடு செம சிம்ப்பிளா வந்து இறங்கிட்டாரு
உதய்பூர்: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக மணமக்கள் குடும்பத்தோடு உதய்பூர் சென்றடைந்துவிட்டார்கள். அதனையடுத்து நேற்றிலிருந்து திருமண கொண்டாட்டங்களும் ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று உதய்பூர் வந்திறங்கினார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்துவந்தார்கள். அவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். தொடர்ந்து அவர்களுக்கு 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது என தகவல்கள் வெளியாகின. அதனை இரண்டு பேரும் நேற்று தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்கள். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

உதய்பூர் சென்றடைந்த குடும்பத்தினர்: திருமண ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக தொடங்கின. ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு நடுவே ரம்யமாக அமைந்திருக்கும் ஐடிசி மெமண்டோஸ் மாளிகையில்தான் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த மாளிகையில் ஒரு நாள் வாடகையே 90,000 ரூபாய் என கூறப்படுகிறது. இத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பிரபலங்களுக்கும் மணமக்கள் அழைப்பிதழை வழங்கினார்கள்.
நேற்றிலிருந்து கொண்டாட்டம்: அதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் நேற்று உதய்பூர் சென்றார்கள். அங்கே சென்றடைந்த கையோடு குடும்பத்தினர் கொண்டாட்டத்தையும் ஆரம்பித்துவிட்டார்கள். கேண்டில் லைட் டின்னர், நீச்சல் குளத்தில் வாலிபால் விளையாட்டு, பார்ட்டி என களைகட்டியது. மாலை கொடுக்கப்பட்ட விருந்தில் ஜப்பானிய உணவுகள் பரிமாறப்பட்டன. விருந்து அளிக்கப்பட்ட மேடையில் VIROSH என்று எம்ப்ராயிடிங் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் மேட்ச்: அதேபோல் இன்று திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெஹந்தி கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது. நாளை ஹல்தி மற்றும் சங்கீத்தும் அதைத் தொடர்ந்து 26ஆம் தேதி திருமணமும் நடக்கவுள்ளது. மேலும் இன்று குடும்பத்தினரிடையே ஜாலியான கிரிக்கெட் மேட்ச்சையும் மணமக்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இவர்களது திருமணத்தில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் உச்சபட்ச ஆர்வத்தோடு இருந்தார்கள்.
குடும்பத்தோடு வந்த அம்பானி: இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்வதற்காக உதய்பூர் வந்தடைந்திருக்கிறார். ரொம்பவே சிம்ப்பிளாக அவர் வந்திறங்கிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அம்பானி வந்திருக்கும் சூழலில் சல்மான் கான், சந்தீப் ரெட்டி வங்கா, கீர்த்தி சனோன், அல்லு அர்ஜுன் என பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு வரும் பிரபலங்கள் தங்குவதற்கு மணமக்கள் குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்களாம்.
பாதுகாப்புக்கு 100 பவுன்சர்கள்: முன்னதாக, இத்திருமணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து 100 பவுன்சர்களை பல கோடி ரூபாய் செலவழித்து இந்த ஜோடி களமிறக்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இவர்களது திருமணம் நடக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் ஹோட்டல்களில் பத்திரிகையாளர்கள் ரூம்கள் புக் செய்து தங்குவதற்கு முயன்றதாகவும்; அதற்கு அந்தந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















