»   »  மந்தார முக்தா!

மந்தார முக்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கேரளாவிலிருந்து இன்னொரு கண்ணுக் குட்டி இறக்குமதியாகி இருக்கிறது. வெல்லக்கட்டிக்கு முக்தா ஜார்ஜ் என்று பெயர்.

கேரளாவிலிருந்து நாள்தோறும் ஒரு நாயகி கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும்நேரத்தில் முக்தா ஜார்ஜின் வரவில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

அவர் நடிக்கப் போகும் இயக்குநர் பெரியவர் என்பதால்தான் முக்தா மீதானஎதிர்பார்ப்பு எகிறி உள்ளது. தொடர்ந்து வெற்றிப் படங்களாகவே கொடுத்து வந்தஇயக்குநர் ஹரியின் தாமிரபரணி படத்தின் நாயகிதான் முக்தா.

இப்படத்திற்காக யாரை ஹீரோயினாகப் போடலாம் என்று ரொம்பவே மண்டைகாய்ந்து கிடந்தார் ஹரி. ஒரு நாயகியும் தோதாகத் தெரியவில்லை.

அந்த நேரத்தில்தான் முக்தா ஜார்ஜ், ஹரியின் கண்ணில் பட்டுள்ளார். அப்புறம் என்ன,கொக்கியைப் போட்டுத் தூக்கி வந்து விட்டார்கள. படு அட்டகாசமாக, மப்பும்,மந்தாரமாக இருக்கிறார் முக்தா.

ஏற்கனவே முக்தா சீனிவாசன் என்று ஒருவர் இருப்பதால் இவரது பெயரை மாற்றிவிடலாம் என ஹரி யோசித்து வருகிறாராம்.

கேரள அழகு தேவதையான முக்தாவுக்கு தமிழ்ப் பட வாய்ப்பு அதுவும், ஹரியின்படம் என்றவுடன் ரொம்ப குஷியாகி விட்டதாம்.

அடுத்த நயனதாரா நான்தான் என்று மார் தட்ட ஆரம்பித்து விட்டாராம் சொந்த ஊரில்.நயனதாராவையும் ஐயா ஹரிதான் தமிழுக்குக் கூட்டி வந்தார் என்பதைச் சொல்லத்தேவையில்லை.

உங்களையும் நயனதாரா லெவலுக்கு மாற்றி விடலாம் என தாமிரபரணி யூனிட்குஷியோடு முக்தாவிடம் கூறிக் கொண்டிருக்கிறதாம். முக்தாவுக்குஅதற்கேற்றார்போல நன்னாத்தான் இருக்கிறார்.

முக்தாவால் யாருக்கு முக்தி கிடைக்கிறதோ இல்லையோ, இயக்குநருக்கு சித்தியும்,தயாரிப்பாளருக்கு போட்ட டப்பும் கிடைத்தால் போதும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil