என் பேரு மீனாகுமாரி.. 38 வயதாகும் முமைத் கான்.. தோழியுடன் படுநெருக்கமாக இருக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!

சென்னை: "என் பேரு மீனாகுமாரி" என கந்தசாமி படத்திலும் "என் செல்லப்பேரு ஆப்பிள்" என போக்கிரி படத்திலும் நடனமாடிய முமைத் கானை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். 38 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் முமைத் கான் தோழி ஒருவருடன் படுநெருக்கமாக இருக்கும் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் முமைத் கான். 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமான முமைத் கான் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

Mumait Khan shares pics with her friend photos out now

38 வயதான முரட்டு சிங்கிள்: மும்பையை சேர்ந்த முமைத் கானுக்கு 38 வயதாகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தற்போது சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். 38 வயதாகும் முமைத் கான் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

Mumait Khan shares pics with her friend photos out now

ஐட்டம் டான்சர்: டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் ஐட்டம் டான்சராக கோலிவுட்டில் அறிமுகமானார் முமைத் கான். கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே" பாடல் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. தாமரை வரிகளில் உருவான துள்ளல் பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அந்த சமயத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முமைத் கானுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டது.

Mumait Khan shares pics with her friend photos out now

என் பேரு மீனாகுமாரி: டோலிவுட்டில் வெளியான போக்கிரி படத்தில் மகேஷ் பாபுவுடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில் தளபதி விஜய்யுடன் "என் செல்லப் பேரு ஆப்பிள்" பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார். சியான் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற "என் பேரு மீனாகுமாரி" ஐட்டம் பாடலும் இவருக்கு ஏகப்பட்ட ஹைப்பை உருவாக்கியது.

போதைப் பொருள் விவகாரம்: சினிமாவில் ஐட்டம் பாடல்களில் ஆடி வந்த முமைத் கான் திடீரென 2013ம் ஆண்டுக்கு பிறகு மார்க்கெட் இழந்து காணாமலே போய் விட்டார். அதன்பின் போதைபொருள் சர்ச்சையில் வசமாக சிக்கி அதிர்ச்சியை கிளப்பினார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போது பாதியிலேயே இவர் வெளியேற்றப்பட காரணமே போதை பொருள் விவகாரம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mumait Khan shares pics with her friend photos out now

கோமா: கடந்த 2016ல் தனது வீட்டில் தடுக்கி விழுந்ததில் முமைத் கானுக்கு தலையில் அடிபட்டது. உள்காயம் ஏற்பட்டு மூளைக்கே பிரச்சனை உண்டாகி விட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் சுயநினைவே இல்லாமல் கோமாவில் இருந்ததாக நடிகை முமைத் கான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன் பின்னர், அமைதியாக மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்து வரும் முமைத் கான் சமீப காலமாக மீண்டும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவாகி உள்ளார்.

தோழியுடன் நெருக்கம்: 38 வயதாகும் முமைத் கான் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், தனது தோழி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முமைத் கானை கட்டி அணைத்துக் கொண்டும் அவரது தோளில் சாய்ந்துக் கொண்டும் அவரது தோழி போஸ் கொடுத்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X