»   »  சந்தோஷ முமைத்!

சந்தோஷ முமைத்!

Subscribe to Oneindia Tamil

மும்பை ஜிலீர் குண்டு முமைத் கான் படா சந்தோஷமாக இருக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவரைத் தேடி பல குத்தாட்ட வாய்ப்புகள் குவிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் குத்தாட்ட சுந்தரிகள் ரசிகர்களை லயிக்க வைப்பது வழக்கம். ஆரம்பத்தில் ஜெயமாலினி, பிறகு சிலுக்கு, அப்புறம்அனுராதா, கடைசியாக டிஸ்கோ சாந்தி என ஒரு வரிசை தொடர் குத்தாட்டத்தில் குதித்து ரசிகர்களை குதூகலிக்க வைத்தது.

அவர்களுக்குப் பிறகு குத்தாட்ட தனி ஆவர்த்த நாயகிகள் பெரிய அளவில் உருவாகவில்லை. நாயகிகளே குத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டதால் இந்த நிலை.

ஆனால் சமீப காலமாக தமிழ்ப் படங்களில் தனிக் குத்துக்கு ஆரவார வரவேற்பு கிடைத்து வருகிறது. ரகசியா, ஜூனியர் சில்க் என சிலர் இதில்குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில் புதுசாக வந்திருப்பவர்தான் முமைத் கான்.

மும்பைவாலான முமைத் கான், தலைநகரம் படத்தில் தான் தலைக் குத்தைப் போட்டார். படு குஜாலான அவரது ஆட்டம் தயாரிப்பாளர்களையும்,ரசிகர்களையும் கவரவே, அடுத்தடுத்து சிங்கிள் பாட்டுக்கு ஜிங்கினாக்கடியாக ஆட ஆரம்பித்தார் முமைத்.

வட்டாரம், போக்கிரி, லீ என தொடர்ந்து முமைத் கானின் குத்தாட்ட களேபரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வந்த வேகத்தில் 12 படங்களில்குத்தாட்டம் போட்டு விட்டார் முமைத்கான். போக்கிரியில் அவர் ஆடிய ஆட்டம், ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்து விட்டதாம்.

இந்த சந்தோஷத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முமைத். செய்தியாளர்கள் கேட்ட சில்மிஷக் கேள்விகளுக்கு தனக்கே உரியபாணியில் படு ஸ்டைலாக பதிலளித்த முமைத், எனக்கென்று எந்த இலக்கும் இல்லை பாஸ். வாழ்க்கையை அதன் பாதையிலேயே ஏற்றுக் கொள்ளும்பக்குவம் எனக்கு உள்ளது.

மும்பையில் பிறந்தவள் என்றாலும் எனக்கு வாழ்க்கைக் கொடுத்தது தெற்குதான். தமிழிலும், தெலுங்கிலும் கை நிறையப் படங்கள் உள்ளன. தமிழைப்போலவே தெலுங்கிலும் என்னை ஆராதிக்கிறார்கள்.

இதை விட எனக்கு வேறு எதுவும் வேண்டாம். வெறும் குத்தாட்டமாக மட்டுமல்லாமல், கூடவே பிட்டு ரோலும் சேர்த்துக் கொடுத்தால் ரொம்பசந்தோஷம் என்றார் முமைத்.

தமிழில் இப்போது பரட்டை என்கிற அழகுசுந்தரம், கிரீடம் உள்பட 7 படங்களில் நர்த்தனம் புரிந்து வருகிறாராம் முமைத். இதுதவிர தெலுங்கில்டாக்டர் ராஜசேகர் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் அசத்தியுள்ளாராம்.

பிரபு தேவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகப் போகும் சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்திலும் ஆடக் கூப்பிட்டுள்ளார்களாம்.

அப்படி ஆடு!

Read more about: mumaith khan speaks

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil