»   »  முமைத்தின் முணகல்

முமைத்தின் முணகல்

Subscribe to Oneindia Tamil

சில ஹீரோக்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக புலம்புகிறார் முமைத்கான்.

தமிழையும், தெலுங்கையும் ஒரே நேரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் கவர்ச்சி வண்டு முமைத் கான். மும்பையிலிருந்து புயலாக கிளம்பி தென்னகம் வந்துள்ள முமைத் கானின் கவர்ச்சி களியாட்டத்திற்கு செமையான டிமாண்ட்.

கை நிறையப் படங்களுடன், மிகக் குறைவான உடையுடன் உடுக்கை இடையுடன் உலுக்கி எடுத்து வருகிறார் முமைத்கான். தமிழைப் போலவே தெலுங்கிலும் முமைத் கானுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

படு பிசியாக ஆடிக் கொண்டிருக்கும் முமைத்கானுக்கு இப்போது புதுச் சிக்கல் கிளம்பியுள்ளதாம். ஏற்கனவே அரை குறை ஆடையுடன் ஆடிக் கொண்டிருக்கும் அவரை இன்னும் குறைச்சலான ஆடையுடன் ஆடும்படி சில ஹீரோக்கள் வற்புறுத்துகிறார்களாம்.

நேரடியாக இதை முமைத்திடம் சொல்லாமல் இயக்குநர்கள் மூலமாக சொல்லி, அதில் அல்ப சந்தோஷம் அடைகிறார்களாம். அத்துடன் நில்லாமல் சில ஹீரோக்களும், இயக்குநர்களும் முமைத் கானுடன் படு நெருக்கமான நட்பு வைத்துக் கொள்ள சீப்பான சில வழிகளைக் கையாளுகிறார்களாம்.

இவர்களின் நடவடிக்கையால் அப்செட் ஆகியுள்ளாராம் முமைத்கான். நான் குறைச்சலான டிரஸ்ஸுன் ஆடுவதால் என்னிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் ஆட்டத்தில்தான் அப்படி இருப்பேன், நிஜத்தில் நான் வேறு மாதிரி. பொறுத்துப் பார்ப்பேன், புரிந்து கொள்ளாவிட்டால் என நிஜ ரூபத்தைக் காட்டுவேன் என்று கூறி வருகிறாராம் முமைத்கான்.

முமைத்கான் புரூஸ் லீ ஆவதும், ஆகாததும் ஹீரோக்கள் கையில்தான் உள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil