ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டபோது உடன் பிரபல நடிகர் இருந்தாரா?

By Shankar

மும்பை: நடிகை ஸ்ருதிஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம மனிதன் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஸ்ருதிஹாஸன் இதுபற்றி போலீசில் புகார் செய்யாதது ஏன் என்றும் போலீசார் கேட்டுள்ளனர்.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இந்தியாவின் இளம் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் அறிமுகமான அவர், தமிழில் ‘7-ம் அறிவு,' ‘3', தெலுங்கில் கப்பர் சிங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்போது, ‘வெல்கம் பேக்' என்ற இந்தி படத்திலும், ‘குர்ராம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

பாந்த்ராவில்...

பாந்த்ராவில்...

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அவர் வசித்து வருகிறார். வழக்கம்போல் அவர் படப்பிடிப்புக்கு போய்விட்டு வீடு திரும்பினார். களைப்பு காரணமாக அவர் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, தூங்குவதற்கு போனார்.

மர்ம மனிதன்

மர்ம மனிதன்

அவர் தூங்க ஆரம்பித்தபோது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டது. உடனே ஸ்ருதி ஹாசன் படுக்கையை விட்டு எழுந்து வந்து, கதவை திறந்தார். வெளியில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம மனிதன் நின்று கொண்டிருந்தான். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே சில முறை பார்த்த முகம்தான் அவன்.

பலாத்காரம்

பலாத்காரம்

ஸ்ருதி ஹாசன் கதவை திறந்ததும் அவரை, அந்த மர்ம மனிதன் பாய்ந்து தாக்கினான். ஸ்ருதியை பலவந்தமாக இழுத்து அணைத்து, கழுத்தைப் பிடித்து நெறித்தான். அவனை, ஸ்ருதி ஹாசன் பலமாக பிடித்து தள்ளிக் கொண்டே, ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினார்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

அவரது குரலை கேட்டதும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். மர்ம மனிதனை பலவந்தமாக அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அவனும் அவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடினான்.

புகார் தரவில்லை

புகார் தரவில்லை

ஸ்ருதி ஹாசன் தாக்கப்பட்ட சம்பவம், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பை கருதி சுருதிஹாசன் அந்த வீட்டை விட்டு வெளியேறி, தனது தோழி வீட்டுக்கு சென்று விட்டார். தாக்குதல் பற்றி புகார் எதுவும் வரவில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்தார்கள்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தகவல் அறிந்ததும் கமல்ஹாசன், மகள் சுருதிஹாசனிடம் போனில் நலம் விசாரித்தார். பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியதோடு, மும்பையில் உள்ள தன் நண்பர்களிடமும் விஷயத்தைக் கூறி ஸ்ருதியைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாராம்.

யார் அந்த மர்ம மனிதன்?

யார் அந்த மர்ம மனிதன்?

ஸ்ருதி ஹாசனை தாக்கிய மர்ம மனிதன் யார்? என்ற விவரம் தெரியவில்லை. ஏன் அவரை தாக்கினான்? என்பதும் தெரியவில்லை. ஆனால், அவன் வெகுநாட்களாக ஸ்ருதி ஹாசனை அவன் பின்தொடர்ந்து இருக்கிறான் என்பது மட்டும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ராமையா வஸ்தாவய்யா படப்பிடிப்பிலும் அவன் ஸ்ருதியைத் தொட முயன்று, துரத்தப்பட்டுள்ளான்.

புகார் தராவிட்டாலும்...

புகார் தராவிட்டாலும்...

ஸ்ருதி விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம், இவனும் அவரைத் தொடர்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி புகார் தராவிட்டாலும், அந்த நபர் யார், எதற்காக சுருதிஹாசனை தாக்கினான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடன் பிரபல நடிகர் இருந்தாரா?

உடன் பிரபல நடிகர் இருந்தாரா?

ஸ்ருதி ஹாஸனை அந்த மர்ம மனிதன் வீட்டில் தாக்கியபோது, ஸ்ருதிஹாஸனின் உடன் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், அதனால்தான் போலீசில் ஸ்ருதியால் புகார் தர முடியவில்லை என்றும் மும்பை மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது. யார் அந்த நடிகர் என்பதும் மர்மமாக உள்ளது. ஸ்ருதிஹாஸன் இசைக்குழு நடத்திக் கொண்டிருந்தபோதே அவருக்கு மும்பையில் ஒரு நெருக்கமான ஆண் நண்பர் இருந்ததாகவும் கூறுவார்கள்.

பதட்டத்தில்...

பதட்டத்தில்...

இந்த சம்பவம் பற்றி ஸ்ருதி ஹாசனிடம் விசாரிப்பதற்காக அவரை போனில் தொடர்பு கொள்ள பலரும் முயன்றனர். அவர்களிடம் 'சுருதி பதற்றத்தில் இருக்கிறார். அவர் இப்போதைக்கு ‘மீடியா'விடம் பேச விரும்பவில்லை' என்று அவருடைய செயலாளர் பதிலளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X