ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. இறந்தும் வாழ்றாங்களே ப்பா
சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஜான்வி ஃபேமஸான நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோனியாகவும் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும், ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி லீட் ரோலிலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

16 வயதினிலே மயில்: ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.

ஸ்ரீதேவி செய்த ரூல்: 16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ரஜினி, கமல் என அப்போது வளர்ந்து வந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஸ்ரீதேவி போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்.
ஹிந்தியில் மயில்: இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும், திறமையாலும் வெற்றிக்கொடியை நாட்டினார். அங்கும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகத்தையும் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைத்தார். அந்த சமயத்தில்தான் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜான்வி கபூர் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவிக்கு கௌரவம்: ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த வதந்திகள் எல்லாம் காற்றோடு காற்றாக போயின. இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. அதாவது மும்பையில் இருக்கும் லோகண்ட்வாலா சந்திப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்தான் ஸ்ரீதேவி வசித்தார். இப்போது அந்தப் பகுதிக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெயர் பலகை திறப்பு போனி கபூர், குஷி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











