»   »  கமிஷன் வெட்டும் மும்தாஜ்

கமிஷன் வெட்டும் மும்தாஜ்

Subscribe to Oneindia Tamil

தனக்கு படவாய்ப்பு வாங்கிக் கொடுத்தால் மற்ற நடிகைகளை விட அதிகக் கமிஷன் தருவதாகக் கூறி சான்ஸ் பிடிக்கும் வேலையில் பலமீடியேட்டர்களை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகில் களமிறக்கி விட்டுள்ளார் மும்தாஜ்.

விஜய டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகியரில் நடிகை அமலாவைத் தவிர வெற்றி பெற்றவர் யாருமில்லை. எல்லாரும் ஓரிடுபடங்களில் நடித்ததோடு பீல்டு அவுட்டானார்கள்.

மோனிஷா என் மோனலிஷா படம் வெளியானபோது, அதை மும்தாஜ் மாற்றியமைப்பார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அவரும்ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு, கவர்ச்சி ஆட்டத்துக்கு வந்துவிட்டார்.

மல மல மருதமலை பாடல் வெளியான சமயத்தில் படத்தில் ஒரு மும்தாஜ் டான்ஸ் இருந்தால், படம் பிச்சுக்கிட்டு ஓடும் என்ற நிலை இருந்தது.அந்த நிலையும் பின்பு மாறியது.

உடம்பு மலை போல் பெருத்து விட, கவர்ச்சி ஆட்டத்திற்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின. கலை நிகழ்ச்சிகளில் ஆடி பொழுதைக்கழித்து வந்தவருக்கு மகாநடிகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதே நேரத்தில் அவரது குருநாதர் விஜய டி.ராஜேந்தர் இயக்கத்தில் வீராசாமி படத்தில் நடிக்கவும் சான்ஸ் கிடைத்தது. ஆனால் டி.ஆர் ஒருகண்டிஷன் போட்டார், உடம்பைக் குறைத்தால் மட்டுமே வாய்ப்பு என்று.

வேறு வழியின்றி உடம்பைக் குறைப்பதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்ற மும்தாஜ் உடல் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்சிகிச்சையை எடுத்துக் கொண்டார். உடம்பு ஏகத்துக்கும் குறைந்துவிட, சப்பை பிகராகனார் மும்தாஜ்.

அதன் பின் மகாநடிகன் படத்தில் நடித்தார். படத்தில் ஹீரோ டாமினேஷன் அதிகம் இருந்ததால் மும்தாஜின் பெயர் வெளியே வரவில்லை.

அதனால் அடுத்து படவாய்ப்புகளும் அதிகமாக வரவில்லை. மும்தாஜ் கைவசம் இப்போது இரண்டே இரண்டு படங்கள் இருக்கின்றன.

ஒன்று வீராசாமி. இந்தப் படம் எப்போது முடியும் என்பது விஜய டி.ராஜேந்தருக்கே தெரியாது என்பதால் மும்தாஜ் இதைப் பெரிதாகநம்பவில்லை.

இதுபோக கையிலிருக்கும் இன்னொரு படம் லண்டன். பிரசாந்த், அங்கீதா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் மும்தாஜ் நடிக்கிறார்என்றாலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

இதனால் உடல் மெலிந்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லையே என்ற சோகத்தில் இப்போது மீடியேட்டர்களின் துணையை நாடியுள்ளார்.

ஒரு பாட்டுக்கு டான்சோ, கவர்ச்சி தரிசனமோ, குஜால் கேரக்டரோ ஏதோ ஒரு படவாய்ப்பு வாங்கிக் கொடுத்தால் மற்ற நடிகைகளை விடஅதிகக் கமிஷன் தருவதாகக் கூறி தமிழிலும் தெலுங்கிலும் ஆட்களை சான்ஸ் வேட்டையில் இறக்கிவிட்டுள்ளார்.

பெரிய கமிஷனுக்காக அவர்கள் மும்தாஜின் லேட்டஸ்ட் சூடான போஸ்களை கையில் வைத்துக் கொண்டு படக் கம்பெனிகளில் ஏறி,இறங்க ஆரம்பித்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil