ஹீரோயின்
கவர்ச்சி "ஹைட்ரஜன் பாம்" மும்தாஜ் தனது படத்தில் நடிக்க முரண்டு பிடித்ததால் ஆத்திரமடைந்த டைரக்டர் பாபு கணேஷ், புரட்சிகரமான பிளஸ்புளகாங்கிதமான முடிவை எடுத்தார்.
மும்தாஜ் இல்லாவிட்டால் என்ன, அவரை விட சூப்பர் பிகரை பிடித்துக் காட்டுகிறேன் பார் என்று சவால் விட்ட அவர் கும்தாஜ் என்ற பெயரில்கேரளத்து குட்டி ஒன்றை கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்திருக்கிறார்.
முகத்தைத் தவிர மற்ற எல்லா "அம்சங்களிலும்" மும்தாஜை நினைவுபடுத்துகிறார் இந்த கும்தாஜ். இரவுப் பாடகன் என்ற பெயரில் தான்எடுக்கப் போகும் படத்தில் கும்தாஜை ஹீரோயினாக நடிக்க வைக்கப் போகிறார் பாபு கணேஷ்.
பாபு கணேஷ் அடிக்கடி பல படங்களுக்குப் பூஜை போடுவார், ஆனால் முழுதாக எந்தப்படம் வந்ததாகத் தெரியவில்லை.
பாபு கணேஷ் எதிர்பார்ப்பதை விட (அவர் மட்டுமா?) கூடுதலாகவே கவர்ச்சியாட்டம் ஆடியிருக்கிறார் கும்தாஜ் என்கிறார்கள்.அவரது ஒத்துழைப்பைப் பார்த்து வியந்து போன பாபு கணேஷ் தனது அடுத்த படமான (அட!) பிளஸ் என்ற படத்திலும்கும்தாஜுக்கு ஹீரோயின் வேஷம் கொடுக்க முடிவு செய்து புக் செய்து விட்டாராம்.
சபாஷ், சரியான போட்டி !


Click it and Unblock the Notifications











