கமலிடம் மும்தாஜ்... மும்தாஜ் மிகக் கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளார். நடிப்பில் அல்ல, உடலைக்குறைப்பதற்காக.!மும்தாஜ் குத்துப் பாட்டு இல்லாமல் படமே இல்லை என்ற அளவுக்கு படு பிசியாகஇருந்தவர். நல்ல திம்சுக் கட்டையாக இருந்த காலத்தில் மும்தாஜுக்கு படு கிராக்கிஇருந்தது.ஆனால் கேரளக் குட்டிகளின் வரவாலும், மும்பையிலிருந்து ஏகப்பட்ட குத்துப் பாட்டுசுந்தரிகள் வந்து குவிந்ததாலும் மும்தாஜை அணுகுவோர் இல்லாமல் போயினர்.ஏதோ சத்யராஜ் போன்ற ஒரு சிலரின் புண்ணியத்தில் அவரது வண்டி ஓடிக்கொண்டுள்ளது. ஆனால் இப்போது நிலைமை பரவாயில்லையாம். ஜெர்ரி படத்தில்மும்தாஜும் ஒரு நாயகி. டி.ராஜேந்தரின் வீராசாமியிலும் கிளாமரில் வெளுத்துவாங்கியுள்ளார். படம்தான் இன்னும் முடிகிறபாடில்லை.இடையில் எக்கச்சக்கமாக இளைத்து விட்ட மும்தாஜ், இப்போது மீண்டும் குண்டுபோட்டு வருகிறார். இதனால் மீண்டும் பாடியை பழைய ஷேப்புக்குக் கொண்டுவருவதற்காக உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.காலை 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.குட்டை ஷார்ட்ஸ், தொள தொள பனியன், தலையில் சின்னதாக ஒரு கர்ச்சீப்பைக்கட்டிக் கொண்டு ஓட ஆரம்பிக்கும் மும்தாஜ், தான் தங்கியிருக்கும் அண்ணா நகர்பகுதியில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்துசேருகிறார். பிறகு யோகாவுக்குப் போகிறார்.இப்படியாக காலைப் பொழுதை அண்ணாநகரை ரவுண்டு அடிப்பதற்காகபயன்படுத்தும் மும்தாஜிடம் இப்போது கையில் திருப்தி தரும் வகையில் படங்கள்இருப்பதால் கோலிவுட்டிலும் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க படு ஆர்வமாக உள்ளார்.கிளாமர் வேடமோ, குத்துப் பாட்டோ, அடிதடி கேரக்டரோ, பிட்டு ரோலோ எதுவாகஇருந்தாலும் பதமாக வாங்கிப் போட்டுக் கொண்டு கால்ஷீட்டைப் பிடிங்க என்றுதயாரிப்பாளர்களின் கையில் திணித்து விடுகிறார்.வெடக்கோழி படப்பிடிப்பு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் நடந்தாம். இதனால்யூனிட்டுடன் அந்தப் பகுதியிலேயே டேரா போட்டு தங்கியிருந்துவிட்டுவந்திருக்கிறார் மும்ஸ். இதில் மும்தாஜின் ரோல் பாஸ்ட் புட் ஹோட்டல் ஓனராம்.ஜெர்ரி படத்தில் நடிகையாகவே அதாவது நடிகை ஜனனி என் கேரக்டரில் நடித்துவருகிறார்.சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாசென்னையில் நடந்தது. அதில் கமல் கலந்து கொண்டார்.நிகழ்ச்சி முடிந்த நிலையில் கமலிடம் போனார் மும்தாஜ். சார் நான் ரொம்ப நாளாஉங்க கூட.. என்று ஆரம்பிக்கவே கமல் திகைத்தார். ஹீரோயின் ரோல் கேட்கப்போகிறாரோ என்று.நான் உங்க கூட ஒரு படம் எடுத்துக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டுஇருந்தேன் என்று மும்தாஜ் சொல்லி முடித்த பிறகே இவ்வளவு தானே என்று கமல்இயல்பு நிலைக்கு வந்தார்.உடனே அங்கிருந்த கோமராமேன்களைக் கூப்பிட்டு எங்களை ஒரு படம்எடுக்குறீங்களா என்று கமல் கேட்டது தான் தாமதம், அட இந்த ஜோடி கூட சிக்னுஇருக்கே என்று பிளாஷ் லைட்களால் இருவரையும் நனைத்து எடுத்துவிட்டார்கள்.இந்த விழாவில் பேசிய கிரேசி மோகன் மும்தாஜை பராட்டு மழையில் நனையவிட்டது தனிக் கதை.

By Staff

மும்தாஜ் மிகக் கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளார். நடிப்பில் அல்ல, உடலைக்குறைப்பதற்காக.!

மும்தாஜ் குத்துப் பாட்டு இல்லாமல் படமே இல்லை என்ற அளவுக்கு படு பிசியாகஇருந்தவர். நல்ல திம்சுக் கட்டையாக இருந்த காலத்தில் மும்தாஜுக்கு படு கிராக்கிஇருந்தது.

ஆனால் கேரளக் குட்டிகளின் வரவாலும், மும்பையிலிருந்து ஏகப்பட்ட குத்துப் பாட்டுசுந்தரிகள் வந்து குவிந்ததாலும் மும்தாஜை அணுகுவோர் இல்லாமல் போயினர்.

ஏதோ சத்யராஜ் போன்ற ஒரு சிலரின் புண்ணியத்தில் அவரது வண்டி ஓடிக்கொண்டுள்ளது. ஆனால் இப்போது நிலைமை பரவாயில்லையாம். ஜெர்ரி படத்தில்மும்தாஜும் ஒரு நாயகி. டி.ராஜேந்தரின் வீராசாமியிலும் கிளாமரில் வெளுத்துவாங்கியுள்ளார். படம்தான் இன்னும் முடிகிறபாடில்லை.


இடையில் எக்கச்சக்கமாக இளைத்து விட்ட மும்தாஜ், இப்போது மீண்டும் குண்டுபோட்டு வருகிறார். இதனால் மீண்டும் பாடியை பழைய ஷேப்புக்குக் கொண்டுவருவதற்காக உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

காலை 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.

குட்டை ஷார்ட்ஸ், தொள தொள பனியன், தலையில் சின்னதாக ஒரு கர்ச்சீப்பைக்கட்டிக் கொண்டு ஓட ஆரம்பிக்கும் மும்தாஜ், தான் தங்கியிருக்கும் அண்ணா நகர்பகுதியில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்துசேருகிறார்.

பிறகு யோகாவுக்குப் போகிறார்.


இப்படியாக காலைப் பொழுதை அண்ணாநகரை ரவுண்டு அடிப்பதற்காகபயன்படுத்தும் மும்தாஜிடம் இப்போது கையில் திருப்தி தரும் வகையில் படங்கள்இருப்பதால் கோலிவுட்டிலும் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க படு ஆர்வமாக உள்ளார்.

கிளாமர் வேடமோ, குத்துப் பாட்டோ, அடிதடி கேரக்டரோ, பிட்டு ரோலோ எதுவாகஇருந்தாலும் பதமாக வாங்கிப் போட்டுக் கொண்டு கால்ஷீட்டைப் பிடிங்க என்றுதயாரிப்பாளர்களின் கையில் திணித்து விடுகிறார்.

வெடக்கோழி படப்பிடிப்பு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் நடந்தாம். இதனால்யூனிட்டுடன் அந்தப் பகுதியிலேயே டேரா போட்டு தங்கியிருந்துவிட்டுவந்திருக்கிறார் மும்ஸ். இதில் மும்தாஜின் ரோல் பாஸ்ட் புட் ஹோட்டல் ஓனராம்.

ஜெர்ரி படத்தில் நடிகையாகவே அதாவது நடிகை ஜனனி என் கேரக்டரில் நடித்துவருகிறார்.


சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாசென்னையில் நடந்தது. அதில் கமல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த நிலையில் கமலிடம் போனார் மும்தாஜ். சார் நான் ரொம்ப நாளாஉங்க கூட.. என்று ஆரம்பிக்கவே கமல் திகைத்தார். ஹீரோயின் ரோல் கேட்கப்போகிறாரோ என்று.

நான் உங்க கூட ஒரு படம் எடுத்துக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டுஇருந்தேன் என்று மும்தாஜ் சொல்லி முடித்த பிறகே இவ்வளவு தானே என்று கமல்இயல்பு நிலைக்கு வந்தார்.

உடனே அங்கிருந்த கோமராமேன்களைக் கூப்பிட்டு எங்களை ஒரு படம்எடுக்குறீங்களா என்று கமல் கேட்டது தான் தாமதம், அட இந்த ஜோடி கூட சிக்னுஇருக்கே என்று பிளாஷ் லைட்களால் இருவரையும் நனைத்து எடுத்துவிட்டார்கள்.

இந்த விழாவில் பேசிய கிரேசி மோகன் மும்தாஜை பராட்டு மழையில் நனையவிட்டது தனிக் கதை.

Read more about: when mumtaj approached kamal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X