Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலையாளப்படம் மூலம் மீண்டும் களம் இறங்கும் மும்தாஜ்
மலைக்க வைக்கும் கவர்ச்சியுடன் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை மும்தாஜ் மலையாள திரைப்படம் மூலம் மீண்டும் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டி. ராஜேந்தரால் கதாநாயாகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் மும்தாஜ். குஷி படத்தில் கட்டிப் புடி கட்டிப்புடிடா பாட்டு மூலம் கிளாமராக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். பின்னர் நமீதா உள்ளிட்ட கவர்ச்சிப் புயல்கள் தமிழ் திரை உலகை ஆக்கிரமிக்கவே காணமல் போனார் மும்தாஜ். இப்போது ஜெயா டிவியில் சிறுவர்கள் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக சேவை செய்து வருகிறார்.
நம்முடைய செய்தி அதைப் பற்றியதல்ல. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மும்தாஜ் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழில் அல்ல மலையாளத்தில். 'ப்ரீவியூ' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தி விட்ட கதாநாயகி கேரக்டரில் நடிக்கிறார்.ஹாசிம் மரிக்கார் இயக்கும் இந்தப் படத்தில் நிஷான், மக்பூல் சல்மான் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் லட்சுமிராயும் நடிக்கிறார்.
இதற்கு முன் 'தாண்டவம்' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் மும்தாஜ். இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. எனவே 'ப்ரீவியூ' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.