»   »  மும்தாஜின் சோக பிரியாணி கவர்ச்சி ராணியாக கோடம்பாக்கத்தில் வலம் வந்த மும்தாஜ், இப்போது சோக ராணியாக மாறி விட்டார். வாய்ப்பும் இல்லை, போதாக்குறைக்கு பல்வேறுசர்ச்சைகளிலும் சிக்கியதால் தற்போதைக்கு இவரது நிலை பரிதாபமாக உள்ளது.ஒரு காலத்தில் கோலிவுட்டில் "மல மல என வேகமாக வளர ஆரம்பித்த மும்தாஜின் குத்தாட்டம் இல்லாமல் ஒரு படமும் ஓடாது என்ற நிலை இருந்தது.மும்தாஜின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கும்தாஜ் என்ற ஒரு கவர்ச்சி குண்டையும் களத்தில் இறக்கிப் பார்த்தனர். ஆனால் அவரால் மும்தாஜின் இடத்தைப் பிடிக்கமுடியவில்லை.ஆனால்,சிம்ரனில் தங்கை மோனலின் தற்கொலையில் மும்தாஜின் பெயர் அடிபட்டது தான் இவருக்கு விழுந்த முதல் அடி. அடுத்து மும்தாஜின் மேனேஜரின்மனைவிக்கும் மும்தாஜுக்கும் இடையே தவறான உறவை சில கோலிவுட் கிசுகிசு பத்திரிக்கைகள் பற்ற வைக்க, நொந்து போனார் மும்தாஜ்.இந்த விவகாரங்களுக்கு பதில் சொல்வதிலேயே அவருக்கு பாதி நேரம் போய்க் கொண்டிருக்க, சினிமா வாய்ப்புக்களும் குறைய ஆரம்பித்துவிட்டன.நொந்து போய் இருந்த நிலையில் தான் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் நடிகை நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் நடிகை நக்மாவோ,தனக்கும் தாவூத் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நடிகை மும்தாஜிக்கும் தாவூதுக்கும் தான் தொடர்பு என்று குண்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தார்.பட்ட காலிலேயே படும் என்பது மாதிரி நக்மாவின் இந்த திடீர் குண்டு வீச்சில் நிலை குலைந்து போய்விட்டார் மும்தாஜ்.தாவூத், கருப்பா சிவப்பா என்று கூடத் தெரியாது என்று புலம்பி வரும் மும்தாஜ் தன்னை போலீசார் எந்த நேரத்தில் வந்து விசாரிப்பார்களோ என்ற பயத்திலேயேநாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார்.கோலிவுட்டில் மும்பை கவர்ச்சி குண்டுகளின் வருகையால் மும்தாஜுக்கு சுத்தமாகவே வாய்ப்புக்கள் இல்லை. சொந்தப் படத்தால் நஷ்டம் வேறு. போதாக்குறைக்குவாய்ப்பு தருவதாக கூறிய நண்பர்களும் கைவிட்டுவிட்டதாகப் புலம்புகிறார்.தன்னுடைய உடல் பெருத்தது தான் வாய்ப்புகள் குறைய காரணம் என்று நினைத்து பல மாதங்களாக கஷ்டப்பட்டு உடலையும் குறைத்துப் பார்த்தார். ஆனாலும் வாய்ப்புவருகிற வழியைத் தான் காணோம்.தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் ராஜேந்தரிடமே போய் வாய்ப்பு கேட்டார். அவரும் போனால் போகட்டும் என்று தனது வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார்.ஆனால் துரதிர்ஷ்டம் அப்படியும் மும்தாஜை விடவில்லை. மும்தாஜின் போதாத நேரம் ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. வீராச்சாமியை படத்தை பாதி கூட எடுக்க முடியாமல் ராஜேந்தரின் நிலைமை மும்தாஜை விடமோசமாகி விட்டது.எக்சர்சைஸால் இளைத்த மும்தாஜின் உடல் தொடர் கவலைகளால் மேலும் இளைத்து விட்டது. அவரது சோகத்தில் நாமும் பங்கு பெறுவோமே என்று நினைத்து, என்னரொம்ப கவலையாக இருக்கிறீங்களாமே என்று கேட்டோம்.சம்பந்தமே இல்லாத விஷயங்களில் என்னை தொடர்புப் படுத்தி அதை பெரிதாக்குகிறார்கள். நான் செய்யும் நல்ல விஷயங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அதைபெரிதுபடுத்துவதும் இல்லை.இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை என்ற அவரிடம் தமிழில் இப்போது அதிகமாக பார்க்க முடியவில்லையே என்றால், யார் சொன்னது,படங்களில் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நான் பிஸியாகத் தான் இருக்கிறேன் என்கிறார்.நீங்க சொன்னா சரிதான்!என்னதான் தனது கவலை ஒரு பக்கம் இருந்தாலும், தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் மும்தாஜுக்கு இணை மும்தாஜ் தான்.அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு சும்மா அனுப்பாமல், கையில் பிரியாணி பொட்டலத்தையும் பஸ்சுக்கு காசும் தந்து அனுப்பி வைக்கிறார்.

மும்தாஜின் சோக பிரியாணி கவர்ச்சி ராணியாக கோடம்பாக்கத்தில் வலம் வந்த மும்தாஜ், இப்போது சோக ராணியாக மாறி விட்டார். வாய்ப்பும் இல்லை, போதாக்குறைக்கு பல்வேறுசர்ச்சைகளிலும் சிக்கியதால் தற்போதைக்கு இவரது நிலை பரிதாபமாக உள்ளது.ஒரு காலத்தில் கோலிவுட்டில் "மல மல என வேகமாக வளர ஆரம்பித்த மும்தாஜின் குத்தாட்டம் இல்லாமல் ஒரு படமும் ஓடாது என்ற நிலை இருந்தது.மும்தாஜின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கும்தாஜ் என்ற ஒரு கவர்ச்சி குண்டையும் களத்தில் இறக்கிப் பார்த்தனர். ஆனால் அவரால் மும்தாஜின் இடத்தைப் பிடிக்கமுடியவில்லை.ஆனால்,சிம்ரனில் தங்கை மோனலின் தற்கொலையில் மும்தாஜின் பெயர் அடிபட்டது தான் இவருக்கு விழுந்த முதல் அடி. அடுத்து மும்தாஜின் மேனேஜரின்மனைவிக்கும் மும்தாஜுக்கும் இடையே தவறான உறவை சில கோலிவுட் கிசுகிசு பத்திரிக்கைகள் பற்ற வைக்க, நொந்து போனார் மும்தாஜ்.இந்த விவகாரங்களுக்கு பதில் சொல்வதிலேயே அவருக்கு பாதி நேரம் போய்க் கொண்டிருக்க, சினிமா வாய்ப்புக்களும் குறைய ஆரம்பித்துவிட்டன.நொந்து போய் இருந்த நிலையில் தான் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் நடிகை நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் நடிகை நக்மாவோ,தனக்கும் தாவூத் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நடிகை மும்தாஜிக்கும் தாவூதுக்கும் தான் தொடர்பு என்று குண்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தார்.பட்ட காலிலேயே படும் என்பது மாதிரி நக்மாவின் இந்த திடீர் குண்டு வீச்சில் நிலை குலைந்து போய்விட்டார் மும்தாஜ்.தாவூத், கருப்பா சிவப்பா என்று கூடத் தெரியாது என்று புலம்பி வரும் மும்தாஜ் தன்னை போலீசார் எந்த நேரத்தில் வந்து விசாரிப்பார்களோ என்ற பயத்திலேயேநாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார்.கோலிவுட்டில் மும்பை கவர்ச்சி குண்டுகளின் வருகையால் மும்தாஜுக்கு சுத்தமாகவே வாய்ப்புக்கள் இல்லை. சொந்தப் படத்தால் நஷ்டம் வேறு. போதாக்குறைக்குவாய்ப்பு தருவதாக கூறிய நண்பர்களும் கைவிட்டுவிட்டதாகப் புலம்புகிறார்.தன்னுடைய உடல் பெருத்தது தான் வாய்ப்புகள் குறைய காரணம் என்று நினைத்து பல மாதங்களாக கஷ்டப்பட்டு உடலையும் குறைத்துப் பார்த்தார். ஆனாலும் வாய்ப்புவருகிற வழியைத் தான் காணோம்.தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் ராஜேந்தரிடமே போய் வாய்ப்பு கேட்டார். அவரும் போனால் போகட்டும் என்று தனது வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார்.ஆனால் துரதிர்ஷ்டம் அப்படியும் மும்தாஜை விடவில்லை. மும்தாஜின் போதாத நேரம் ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. வீராச்சாமியை படத்தை பாதி கூட எடுக்க முடியாமல் ராஜேந்தரின் நிலைமை மும்தாஜை விடமோசமாகி விட்டது.எக்சர்சைஸால் இளைத்த மும்தாஜின் உடல் தொடர் கவலைகளால் மேலும் இளைத்து விட்டது. அவரது சோகத்தில் நாமும் பங்கு பெறுவோமே என்று நினைத்து, என்னரொம்ப கவலையாக இருக்கிறீங்களாமே என்று கேட்டோம்.சம்பந்தமே இல்லாத விஷயங்களில் என்னை தொடர்புப் படுத்தி அதை பெரிதாக்குகிறார்கள். நான் செய்யும் நல்ல விஷயங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அதைபெரிதுபடுத்துவதும் இல்லை.இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை என்ற அவரிடம் தமிழில் இப்போது அதிகமாக பார்க்க முடியவில்லையே என்றால், யார் சொன்னது,படங்களில் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நான் பிஸியாகத் தான் இருக்கிறேன் என்கிறார்.நீங்க சொன்னா சரிதான்!என்னதான் தனது கவலை ஒரு பக்கம் இருந்தாலும், தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் மும்தாஜுக்கு இணை மும்தாஜ் தான்.அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு சும்மா அனுப்பாமல், கையில் பிரியாணி பொட்டலத்தையும் பஸ்சுக்கு காசும் தந்து அனுப்பி வைக்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி ராணியாக கோடம்பாக்கத்தில் வலம் வந்த மும்தாஜ், இப்போது சோக ராணியாக மாறி விட்டார். வாய்ப்பும் இல்லை, போதாக்குறைக்கு பல்வேறுசர்ச்சைகளிலும் சிக்கியதால் தற்போதைக்கு இவரது நிலை பரிதாபமாக உள்ளது.

ஒரு காலத்தில் கோலிவுட்டில் "மல மல என வேகமாக வளர ஆரம்பித்த மும்தாஜின் குத்தாட்டம் இல்லாமல் ஒரு படமும் ஓடாது என்ற நிலை இருந்தது.

மும்தாஜின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கும்தாஜ் என்ற ஒரு கவர்ச்சி குண்டையும் களத்தில் இறக்கிப் பார்த்தனர். ஆனால் அவரால் மும்தாஜின் இடத்தைப் பிடிக்கமுடியவில்லை.

ஆனால்,சிம்ரனில் தங்கை மோனலின் தற்கொலையில் மும்தாஜின் பெயர் அடிபட்டது தான் இவருக்கு விழுந்த முதல் அடி. அடுத்து மும்தாஜின் மேனேஜரின்மனைவிக்கும் மும்தாஜுக்கும் இடையே தவறான உறவை சில கோலிவுட் கிசுகிசு பத்திரிக்கைகள் பற்ற வைக்க, நொந்து போனார் மும்தாஜ்.

இந்த விவகாரங்களுக்கு பதில் சொல்வதிலேயே அவருக்கு பாதி நேரம் போய்க் கொண்டிருக்க, சினிமா வாய்ப்புக்களும் குறைய ஆரம்பித்துவிட்டன.

நொந்து போய் இருந்த நிலையில் தான் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் நடிகை நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் நடிகை நக்மாவோ,தனக்கும் தாவூத் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நடிகை மும்தாஜிக்கும் தாவூதுக்கும் தான் தொடர்பு என்று குண்டைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தார்.

பட்ட காலிலேயே படும் என்பது மாதிரி நக்மாவின் இந்த திடீர் குண்டு வீச்சில் நிலை குலைந்து போய்விட்டார் மும்தாஜ்.

தாவூத், கருப்பா சிவப்பா என்று கூடத் தெரியாது என்று புலம்பி வரும் மும்தாஜ் தன்னை போலீசார் எந்த நேரத்தில் வந்து விசாரிப்பார்களோ என்ற பயத்திலேயேநாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார்.

கோலிவுட்டில் மும்பை கவர்ச்சி குண்டுகளின் வருகையால் மும்தாஜுக்கு சுத்தமாகவே வாய்ப்புக்கள் இல்லை. சொந்தப் படத்தால் நஷ்டம் வேறு. போதாக்குறைக்குவாய்ப்பு தருவதாக கூறிய நண்பர்களும் கைவிட்டுவிட்டதாகப் புலம்புகிறார்.

தன்னுடைய உடல் பெருத்தது தான் வாய்ப்புகள் குறைய காரணம் என்று நினைத்து பல மாதங்களாக கஷ்டப்பட்டு உடலையும் குறைத்துப் பார்த்தார். ஆனாலும் வாய்ப்புவருகிற வழியைத் தான் காணோம்.

தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் ராஜேந்தரிடமே போய் வாய்ப்பு கேட்டார். அவரும் போனால் போகட்டும் என்று தனது வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார்.ஆனால் துரதிர்ஷ்டம் அப்படியும் மும்தாஜை விடவில்லை.

மும்தாஜின் போதாத நேரம் ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. வீராச்சாமியை படத்தை பாதி கூட எடுக்க முடியாமல் ராஜேந்தரின் நிலைமை மும்தாஜை விடமோசமாகி விட்டது.

எக்சர்சைஸால் இளைத்த மும்தாஜின் உடல் தொடர் கவலைகளால் மேலும் இளைத்து விட்டது. அவரது சோகத்தில் நாமும் பங்கு பெறுவோமே என்று நினைத்து, என்னரொம்ப கவலையாக இருக்கிறீங்களாமே என்று கேட்டோம்.

சம்பந்தமே இல்லாத விஷயங்களில் என்னை தொடர்புப் படுத்தி அதை பெரிதாக்குகிறார்கள். நான் செய்யும் நல்ல விஷயங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அதைபெரிதுபடுத்துவதும் இல்லை.

இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை என்ற அவரிடம் தமிழில் இப்போது அதிகமாக பார்க்க முடியவில்லையே என்றால், யார் சொன்னது,படங்களில் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நான் பிஸியாகத் தான் இருக்கிறேன் என்கிறார்.

நீங்க சொன்னா சரிதான்!

என்னதான் தனது கவலை ஒரு பக்கம் இருந்தாலும், தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் மும்தாஜுக்கு இணை மும்தாஜ் தான்.

அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு சும்மா அனுப்பாமல், கையில் பிரியாணி பொட்டலத்தையும் பஸ்சுக்கு காசும் தந்து அனுப்பி வைக்கிறார்.

Read more about: mumtaj in trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil