»   »  என் இடம் காலியாக தான் இருக்கு: மும்தாஜ் தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னும் காலியாகத் தான் இருக்கிறது. விரைவில் விட்ட இடத்தை பிடிக்கிறேனா இல்லையாபாருங்கள் என்று சவால் விடுகிறார் மும்தாஜ்.மல மல மும்தாஜுக்கு சமீப காலமாகவே போதாத காலம் என்று தான் கூறவேண்டும். ராஜேந்தரின் பட்டறையில் தீட்டப்பட்டுகோலிவுட்டில் கால் பதித்த மும்தாஜ் தனது அங்கப்பிரதட்சணத்தால் கோலிவுட்டை கலக்கி வந்தார்.மல மல பாடல் மூலம் உச்சிக்கு போன மும்தாஜுக்கு திடீரென நாலா திசைகளிலிருந்து பிரச்சினைகள் முளைத்தன. முதலில்வந்தது தற்கொலைப் பிரச்சினை. சிம்ரனின் தங்கையும், நடிகையுமான மோனலின் தற்கொலைக்கு மும்தாஜ் தான் காரணம் என்றுசிம்ரனே குற்றம் சாட்டினார்.இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன்மும்தாஜுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பரபரப்பு புகார் எழுந்தது.அடுத்தடுத்த இந்த இந்த புகார்களால் மும்தாஜை மெதுவாக கோலிவுட் மறக்க ஆரம்பித்தது. வாய்ப்புகள் குறையத்தொடங்கியதால் பலரிடமும் சென்று முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் பலரும் மும்பை குஜிலிகளின் பின்னால் தான்போனார்களே தவிர மும்தாஜை சீண்டவில்லை.என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்தவாறே, மீண்டும் தனது குருநாதர் ராஜேந்தரின் காலடியில் போய்விழுந்தார். அவரும் தனது அருமை சிஷ்யைக்கு வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படத்தின் ஹீரோயின்மேக்னா நாயுடுவும் இன்னொரு ஹீரோயினான விபூதியும் படத்தை விட்டே விலகிப் போய்விட்டதால் அந்தப் படம் அப்படியேவேதாளம் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கிறது.இந்த சமயத்தில் தான் மும்ஸுக்கு வேண்டப்பட்ட சிலர் மீண்டும் மார்க்கெட் பிடிக்க ஒரு ஐடியா கொடுத்தனர். அதாவது மும்பைசரக்குகளுடன் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் உங்களது மலை போல உடம்பை கொஞ்சம் குறைத்தால் தான் முடியும் என்றுகூற, அவரும் சிக்கன், மட்டனை ஒதுக்கி விட்டு படாத பாடுபட்டு உடம்பைக் குறைத்தார்.ஆனால் என்ன பிரயோஜனம்? சான்ஸ் மட்டும் வரவேயில்லை. சந்தடி சாக்கில் வாய்ப்பு கிடைத்த மகா நடிகனிலும்,லண்டனிலும் தனது முழுத்தெறமையையும் காட்டியும் நோ யூஸ்.இதனால் பெரும் சோகத்தில் இருந்த மும்தாஜிடம் நைசாக போய் இனிமேல் உங்க பியூச்சர் பிளான் என்ன என்று கேட்டோம்.உடல் எடையைக் குறைத்தால் நிறைய வாய்ப்பு வரும் என்று கோலிவுட்டில் சில நண்பர்கள் சொன்னதால் தான் ரொம்பக்கஷ்டப்பட்டு எடையைக் குறைத்தேன்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வரவில்லை. இப்போது பெண் நிலா என்ற திரில்லர் படத்தில் சைடு ஹீரோயினாகநடித்து வருகிறேன். இதில் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் எனது நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்.இப்போது தினமும் கவர்ச்சிக்காகவே நிறைய பேர் வருகிறார்கள். ஆனாலும் தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னமும்காலியாகத் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு மீண்டும் வருவேன் என்றார் பழைய நினைப்பில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.நல்லா இருந்தா சரி..

என் இடம் காலியாக தான் இருக்கு: மும்தாஜ் தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னும் காலியாகத் தான் இருக்கிறது. விரைவில் விட்ட இடத்தை பிடிக்கிறேனா இல்லையாபாருங்கள் என்று சவால் விடுகிறார் மும்தாஜ்.மல மல மும்தாஜுக்கு சமீப காலமாகவே போதாத காலம் என்று தான் கூறவேண்டும். ராஜேந்தரின் பட்டறையில் தீட்டப்பட்டுகோலிவுட்டில் கால் பதித்த மும்தாஜ் தனது அங்கப்பிரதட்சணத்தால் கோலிவுட்டை கலக்கி வந்தார்.மல மல பாடல் மூலம் உச்சிக்கு போன மும்தாஜுக்கு திடீரென நாலா திசைகளிலிருந்து பிரச்சினைகள் முளைத்தன. முதலில்வந்தது தற்கொலைப் பிரச்சினை. சிம்ரனின் தங்கையும், நடிகையுமான மோனலின் தற்கொலைக்கு மும்தாஜ் தான் காரணம் என்றுசிம்ரனே குற்றம் சாட்டினார்.இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன்மும்தாஜுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பரபரப்பு புகார் எழுந்தது.அடுத்தடுத்த இந்த இந்த புகார்களால் மும்தாஜை மெதுவாக கோலிவுட் மறக்க ஆரம்பித்தது. வாய்ப்புகள் குறையத்தொடங்கியதால் பலரிடமும் சென்று முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் பலரும் மும்பை குஜிலிகளின் பின்னால் தான்போனார்களே தவிர மும்தாஜை சீண்டவில்லை.என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்தவாறே, மீண்டும் தனது குருநாதர் ராஜேந்தரின் காலடியில் போய்விழுந்தார். அவரும் தனது அருமை சிஷ்யைக்கு வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படத்தின் ஹீரோயின்மேக்னா நாயுடுவும் இன்னொரு ஹீரோயினான விபூதியும் படத்தை விட்டே விலகிப் போய்விட்டதால் அந்தப் படம் அப்படியேவேதாளம் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கிறது.இந்த சமயத்தில் தான் மும்ஸுக்கு வேண்டப்பட்ட சிலர் மீண்டும் மார்க்கெட் பிடிக்க ஒரு ஐடியா கொடுத்தனர். அதாவது மும்பைசரக்குகளுடன் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் உங்களது மலை போல உடம்பை கொஞ்சம் குறைத்தால் தான் முடியும் என்றுகூற, அவரும் சிக்கன், மட்டனை ஒதுக்கி விட்டு படாத பாடுபட்டு உடம்பைக் குறைத்தார்.ஆனால் என்ன பிரயோஜனம்? சான்ஸ் மட்டும் வரவேயில்லை. சந்தடி சாக்கில் வாய்ப்பு கிடைத்த மகா நடிகனிலும்,லண்டனிலும் தனது முழுத்தெறமையையும் காட்டியும் நோ யூஸ்.இதனால் பெரும் சோகத்தில் இருந்த மும்தாஜிடம் நைசாக போய் இனிமேல் உங்க பியூச்சர் பிளான் என்ன என்று கேட்டோம்.உடல் எடையைக் குறைத்தால் நிறைய வாய்ப்பு வரும் என்று கோலிவுட்டில் சில நண்பர்கள் சொன்னதால் தான் ரொம்பக்கஷ்டப்பட்டு எடையைக் குறைத்தேன்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வரவில்லை. இப்போது பெண் நிலா என்ற திரில்லர் படத்தில் சைடு ஹீரோயினாகநடித்து வருகிறேன். இதில் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் எனது நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்.இப்போது தினமும் கவர்ச்சிக்காகவே நிறைய பேர் வருகிறார்கள். ஆனாலும் தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னமும்காலியாகத் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு மீண்டும் வருவேன் என்றார் பழைய நினைப்பில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.நல்லா இருந்தா சரி..

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னும் காலியாகத் தான் இருக்கிறது. விரைவில் விட்ட இடத்தை பிடிக்கிறேனா இல்லையாபாருங்கள் என்று சவால் விடுகிறார் மும்தாஜ்.

மல மல மும்தாஜுக்கு சமீப காலமாகவே போதாத காலம் என்று தான் கூறவேண்டும். ராஜேந்தரின் பட்டறையில் தீட்டப்பட்டுகோலிவுட்டில் கால் பதித்த மும்தாஜ் தனது அங்கப்பிரதட்சணத்தால் கோலிவுட்டை கலக்கி வந்தார்.

மல மல பாடல் மூலம் உச்சிக்கு போன மும்தாஜுக்கு திடீரென நாலா திசைகளிலிருந்து பிரச்சினைகள் முளைத்தன. முதலில்வந்தது தற்கொலைப் பிரச்சினை. சிம்ரனின் தங்கையும், நடிகையுமான மோனலின் தற்கொலைக்கு மும்தாஜ் தான் காரணம் என்றுசிம்ரனே குற்றம் சாட்டினார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன்மும்தாஜுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பரபரப்பு புகார் எழுந்தது.


அடுத்தடுத்த இந்த இந்த புகார்களால் மும்தாஜை மெதுவாக கோலிவுட் மறக்க ஆரம்பித்தது. வாய்ப்புகள் குறையத்தொடங்கியதால் பலரிடமும் சென்று முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் பலரும் மும்பை குஜிலிகளின் பின்னால் தான்போனார்களே தவிர மும்தாஜை சீண்டவில்லை.

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்தவாறே, மீண்டும் தனது குருநாதர் ராஜேந்தரின் காலடியில் போய்விழுந்தார். அவரும் தனது அருமை சிஷ்யைக்கு வீராச்சாமியில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படத்தின் ஹீரோயின்மேக்னா நாயுடுவும் இன்னொரு ஹீரோயினான விபூதியும் படத்தை விட்டே விலகிப் போய்விட்டதால் அந்தப் படம் அப்படியேவேதாளம் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் தான் மும்ஸுக்கு வேண்டப்பட்ட சிலர் மீண்டும் மார்க்கெட் பிடிக்க ஒரு ஐடியா கொடுத்தனர். அதாவது மும்பைசரக்குகளுடன் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் உங்களது மலை போல உடம்பை கொஞ்சம் குறைத்தால் தான் முடியும் என்றுகூற, அவரும் சிக்கன், மட்டனை ஒதுக்கி விட்டு படாத பாடுபட்டு உடம்பைக் குறைத்தார்.

ஆனால் என்ன பிரயோஜனம்? சான்ஸ் மட்டும் வரவேயில்லை. சந்தடி சாக்கில் வாய்ப்பு கிடைத்த மகா நடிகனிலும்,லண்டனிலும் தனது முழுத்தெறமையையும் காட்டியும் நோ யூஸ்.


இதனால் பெரும் சோகத்தில் இருந்த மும்தாஜிடம் நைசாக போய் இனிமேல் உங்க பியூச்சர் பிளான் என்ன என்று கேட்டோம்.உடல் எடையைக் குறைத்தால் நிறைய வாய்ப்பு வரும் என்று கோலிவுட்டில் சில நண்பர்கள் சொன்னதால் தான் ரொம்பக்கஷ்டப்பட்டு எடையைக் குறைத்தேன்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வரவில்லை. இப்போது பெண் நிலா என்ற திரில்லர் படத்தில் சைடு ஹீரோயினாகநடித்து வருகிறேன். இதில் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் எனது நடிப்புக்கும் தீனி போடும் கேரக்டர்.

இப்போது தினமும் கவர்ச்சிக்காகவே நிறைய பேர் வருகிறார்கள். ஆனாலும் தமிழில் நான் விட்டுச் சென்ற இடம் இன்னமும்காலியாகத் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு மீண்டும் வருவேன் என்றார் பழைய நினைப்பில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

நல்லா இருந்தா சரி..

Read more about: sunitha varmas new film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil