வித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த படத்திற்கு கிருஷ் இசையமைத்துள்ளார். இவர் நடிகை சங்கீதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ரிலீஸை முன்னிட்டு இசையமைப்பாளர் கிருஷ் உடன் ரம்யா பாண்டியன் எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி வைரலாகி வருகிறது.

சூர்யா ஜோதிகா தயாரிப்பில்

சூர்யா ஜோதிகா தயாரிப்பில்

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் சார்பில் ஏகப்பட்ட படங்களை வரிசையாக தயாரித்து வருகின்றனர். இந்த மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை மாசத்துக்கு ஒரு படம் என அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் புதிய படங்களை வெளியிட காத்திருக்கின்றனர்.

ரம்யா பாண்டியன் படம்

ரம்யா பாண்டியன் படம்

ஜோக்கர் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய நிலையில், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளை ஒடிடியில் அந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், ரம்யா பாண்டியன் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

என்ன கதாபாத்திரம்

என்ன கதாபாத்திரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் அசத்தினாலும் மண் வாசம் மாறாத வீராயி கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரம் என்பதால் ரம்யா பாண்டியன் ஸ்கோர் செய்ய பெரிய வாய்ப்பு உள்ளது.

வாணி போஜன்

வாணி போஜன்

இந்த படத்தில் ரம்யா பாண்டியன் உடன் இணைந்து நடிகை வாணி போஜனும் நடித்துள்ளார். மீடியாவில் வேலை செய்யும் துணிச்சலான ரிப்போர்ட்டராக வாணி போஜன் வரும் காட்சிகள் டிரைலரில் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளன. படத்திலும் அவருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் வெளியீடு

யுவன் வெளியீடு

நடிகை சங்கீதாவின் கணவர் கிருஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவான அற்புதமான பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி ஹிட் அடித்துள்ளன. யுவன் சங்கர் ராஜா மொத்த ஆல்பத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

அக்கா Ramya Pandian ஐ நான் எப்பவும் அப்படி நினைத்ததில்லை | Keerthi pandian chat | Filmibeat Tamil
ரம்யா பாண்டியனுடன் செல்ஃபி

ரம்யா பாண்டியனுடன் செல்ஃபி

நடிகை ரம்யா பாண்டியன் உடன் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் இசையமைப்பாளர் கிருஷ் எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கிருஷ் ஷேர் செய்து 'With Veerayi' என ரம்யா பாண்டியனின் கதாபாத்திர பெயரையும் ரிவீல் செய்துள்ளார். இந்த செல்ஃபியை ரம்யா பாண்டியன் ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X