ஆள விடுங்கடா சாமி... என் பிறந்த நாள் அடுத்த மாசம்..கடுப்பான பிரபல நடிகை !

சென்னை : திரைத் துறையைப் பொறுத்த வரையில் நடிகர் நடிகைகளுக்கு எந்த ரூபத்தில் வதந்திகள் வரும் என கணிக்கவே முடியாது.

Recommended Video

Bigg Boss Mahat reduced his salary | Simbhu Friends on Board, Mahat, Harrish Kalyan

சமீப காலங்களில் நிறைய படங்கள் OTTயில் வெளியிடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரபல தமிழ் நடிகையின் பிறந்தநாளும் வதந்தியாக மாறியுள்ளது.

அடுத்த மாசம் தனது பிறந்தநாள் உள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பலரும் வாழ்த்துக்கள் சொன்னதால் தமிழ் நடிகை கடுப்பாகி ட்விட் போட்டுள்ளார்.

குட்டி குஷ்பூ

குட்டி குஷ்பூ

தமிழ் நடிகைகளில் ஒருவரின் சாயலில் மற்றொருவர் தோன்றுவது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகை குஷ்புவை போலவே ஹன்சிகா மோத்வானியும் உள்ளதால் அவரை எல்லோரும் குட்டி குஷ்பூ என அழைத்து வந்தது பலரும் அறிந்ததே.

க்யூட்டான நடிப்பாலும்

க்யூட்டான நடிப்பாலும்

தனது கொழுகொழு தேகத்தாலும், க்யூட்டான நடிப்பாலும், கொஞ்சும் பேச்சாலும் இந்தியாவில் பல மொழிகளில் தனது ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த ஹன்சிகா மோத்வானி தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

தமிழில் மாப்பிள்ளை படத்தில் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதைத்தொடர்ந்து மான்கராத்தே ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல் என பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தமிழ் திரைத்துறையில் உருவாக்கி வைத்திருந்தார்.

ஸ்லிம்மான லுக்கில்

ஸ்லிம்மான லுக்கில்

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி தற்போது தனது கொழுகொழுப்பான உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான லுக்கில் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரப்பி ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்நிலையில் ஜூலை 9-ஆம் தேதி ஹன்சிகாவின் பிறந்த நாள் என ஒரு சில விஷமிகளால் வதந்திகள் பரப்பப்பட்டு. அதை பலரும் உண்மை உன நம்பி ரசிகர்களும், பலர் நண்பர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமூகவலைத்தளத்திலும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் கடுப்பாகி பொறுமை இழந்த ஹன்சிகா, ஆள விடுங்கடா சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு மாத காலம்

ஒரு மாத காலம்

ஹன்சிகா போட்டிருந்த ட்விட்டில் " உங்களின் அன்பான வாழ்த்துக்களால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன், நான் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது ஏகப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பி உள்ளீர்கள். ஆனால் எனது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 9ஆம் தேதி" என ட்விட்டர் பக்கத்தில் ஹன்சிகா மோத்வானி பதிவிட்டிருந்தார். இந்தக் கதையைக் கேட்டு பல நெட்டிசன்கள் ஹன்சிகாவிற்காக பரிதாபப்பட்டு வரும் நிலையில் சிலர் இவருக்கு அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X