5 வருடம் தொடர்பில் இருந்த என் பாய்பிரண்ட்...: மனம் திறக்கும் நீது சந்திரா
சென்னை: தான் 5 வருடம் பாய் பிரண்ட் ஒருவருடன் பழகி வந்ததாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் நடிகை நீது சந்திரா.
யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா.
இவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது பாய்பிரண்ட் மற்றும் தனது திரை உலக வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

போஜ்புரி படங்கள்....
நான் பீகாரை சேர்ந்தவள். போஜ்புரிதான் எனது தாய் மொழி. போஜ்புரி படங்கள் ஆபாசமானது என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அதுபோன்ற படங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.

முதல் படம்....
போஜ்புரி மொழி படத்தின் மீதான எண்ணத்தை மாற்ற நினைத்தேன். அதற்காக தேஸ்வா என்ற பெயரில் சொந்த படம் தயாரித்தேன். அப்படம் 8 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் போஜ்புரி படமும் இதுதான்.

கிசுகிசுக்கள்...
என்னைப்பற்றி வரும் காதல் கிசுகிசுக்கள் பற்றி கேட்கிறார்கள். அதுபோன்ற கிசுகிசுவை நான் விரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் என்னைப்பற்றி கிசுகிசுக்கள் வந்ததில்லை.

என் பாய் பிரண்ட்....
பாய்பிரண்ட் ஒருவருடன் எனக்கு 5 வருடமாக தொடர்பு இருந்தது. அவருடன் இணைத்துதான் என்னைபற்றி கிசுகிசுவரும்.

நூறு சதவீத உழைப்பு....
என்னைப் பொறுத்தவரை கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு வேலையில் ஈடுபட்டால் நூறு சதவீதம் உழைக்க வேண்டும் அதைவிட்டு 99 சதவீதம் ஈடுபாடு காட்டினால் அது பூஜ்ஜியத்துக்கு தான் சமம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரன்தீப் தானா அது....?
நீது குறிப்பிட்ட அந்த பாய்பிரண்ட், பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹூடா என்றும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அவரது நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











