என்னோட கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா? ஜான்வி கபூர் கண்டிசன்

மும்பை : தன்னுடைய வருங்கால கணவர் தனது திறமைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும், நகைச்சுவை உணர்வு மிக்கவராக, அவர் விரும்பும் செயல்களில் கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை மிகவும் கண்மூடித்தனமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்

22 வயசு பொண்ணு இப்பவே தனக்கு கல்யாணம் இப்படி நடக்கணும், இங்கதான் நடக்கணும், மாப்பிள்ளை இப்படி தான் இருக்கணும், அப்படி வேணும்னு ஒரு லிஸ்டே குடுக்குது. அது யார் தெரியுமா. மறைந்த கனவுக்கன்னி நடிகை ஸ்ரீதேவியின் செல்ல மகள் ஜான்வி கபூர் தான் அது.

ஒரு பிரபலமான வடஇந்திய நாளிதழுக்காக சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தனது திருமணம் எவ்வாறு இருக்க வேண்டும், வருங்கால கணவர் எவ்வாறு அமைய வேண்டும், என்று கேட்ட கேள்விக்கு மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம் பட்டுப்புடவை

காஞ்சிபுரம் பட்டுப்புடவை

ஜான்வி தனது திருமணம் அழகிய தமிழ் பெண்ணாக காஞ்சிபுரம் பட்டு சேலை உடுத்தி, நன்றாக அலங்காரம் செய்து, தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, சாம்பார், தயிர்சாதம் போன்ற பாரம்பரிய உணவு வகைகளோடு எளிமையான முறையில் அதுவும் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

வருங்கால கணவர்

வருங்கால கணவர்

தன்னோட வருங்கால கணவர் தனது திறமைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும், நகைச்சுவை உணர்வு மிக்கவராக, அவர் விரும்பும் செயல்களில் கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை மிகவும் கண்மூடித்தனமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் என பல கண்டிசன்களை போட்டிருக்கிறார்.

கல்யாண கனவு

கல்யாண கனவு

மூன்று வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் தன்னுடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட கற்பனை செய்து கேள்விகளுக்கு மிகவும் அழகாக பதில் அளித்துள்ளார். இந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி செய்யப்போகும் அந்த புண்ணியவான் எங்கிருக்கிறானோ. லக்கி பாய்.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

தேசிய விருது பெற்ற மராட்டி திரைப்படம் சாய்ராட். இப்படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். தனது இரண்டாவது படமான கஞ்சன் சக்ஸேனா திரைப்படத்தில் கார்கில் பைலட்டாக நடிக்கிறார். இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

தமிழில் எப்போது

தமிழில் எப்போது

தமிழில் அவர் எப்போது காலடி எடுத்து வைப்பார் என்று ஆவலோடு காத்திருக்கின்றனர், அவரது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்கள். தனது தந்தை தயாரிப்பில் தல அஜித்குமார் நடிக்கும் தல 60 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. அது பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் நாசுக்காக தவிர்த்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X