நான் நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: அர்ஜுன் பட ஹீரோயின்
Recommended Video

மும்பை: நான் நிர்வாணமாகவே நடித்தாலும் என் கணவர் என்னை ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா தமிழில் ஜெய்ஹிந்த் 2 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர் அதை இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார்.
அண்மையில் தான் தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சினிமா, திருமணம் குறித்து அவர் கூறியதாவது,

அதிர்ச்சி
எனக்கு திருமணமாகிவிட்டது என்ற அறிந்து மக்கள் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்? திருமணத்திற்கு பிறகு நடிகைக்கு மவுசு இல்லை என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சாதித்துள்ளார்கள்.

நடிப்பு
திருமணத்தையும், தொழிலையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. பிற தொழில்களை போன்று தான் சினிமாவில் பெண்கள் திருணமத்திற்கு பிறகு வேலை செய்கிறார்கள். நல்ல மாப்பிள்ளை வந்தால் நடிகைகள் தாமதிக்கக் கூடாது.

யோசனை
சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். அதை தான் நான் செய்துள்ளேன். நான் படங்களில் சக நடிகர்களை முத்தமிடலாம், நிர்வாணமாக நடிக்கலாம். அதை பார்த்து என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார். அந்த அளவுக்கு என்னை புரிந்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நபர் கிடைத்துள்ளபோது நான் ஏன் திருமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும்.

ஊக்குவிப்பு
என் கணவர் என் வேலையை ஆதரிக்கிறார். இப்படி ஒருவர் ஆதரவான கணவர் வேண்டும் என்று தானே அனைத்து பெண்களும் விரும்புவார்கள். என்னை தேடி நல்ல கதை வந்தால் அந்த படத்தில் நடிக்குமாறு கூறும் முதல் ஆள் என் கணவராக தான் இருப்பார் என்கிறார் சுர்வீன் சாவ்லா.


Click it and Unblock the Notifications











