இரவு வந்தாலே பயப்படுவேன்.. கணவரின் பாலியல் கொடுமைகள் குறித்து யுக்தா முகி பரபரப்பு பேட்டி!

By Mayura Akilan

என்னுடைய தெய்வ நம்பிக்கைதான் என்னை காப்பாற்றியுள்ளது என்று கணவனால் பாலியல் சித்ரவதைக்கு ஆளான உலக அழகி யுக்தாமுகி கூறியுள்ளார்.

1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டம் வென்ற யுக்தாமுகி, பின்னர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் ஹிந்தி மற்றும் தமிழ்ப்படங்களில் நடித்தார்.

இவருக்கு பிரின்ஸ் டுலி என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. 3 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார் யுக்தாமுகி.

அதில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான உறவு கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த யுக்தா முகி கணவர்மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

கணவரின் சுயரூபம்

கணவரின் சுயரூபம்

திருமணத்துக்கு முன்பு பிரின்ஸ் மேல் எந்த தவறையும் காண முடியவில்லை. திருமணமான ஒரு மாதத்திலேயே குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர் சுயரூபம் தாமதமாகத்தான் தெரிந்தது.

எல்லாருமே லூசுங்கதான்

எல்லாருமே லூசுங்கதான்

பிரின்ஸ்க்கும் அவர் குடும்பத்தினருக்கும் மன ரீதியான பிரச்சினைகள் உள்ளன. என்னை பல வகையில் துன்புறுத்தினார்கள். பிரின்சின் மூத்த சகோதரர் போதை பொருள், மது பழக்கத்தில் இறந்தார்.

சம்பாத்தியம் கேட்ட சகோதரி

சம்பாத்தியம் கேட்ட சகோதரி

பிரின்ஸ் சகோதரி திருமணத்துக்கு முன்பே என்னை சந்தித்து எனது சம்பாத்தியம் பற்றி கேட்டார். எவ்வளவு வருமானம் வருகிறது. அந்த பணத்தை என்ன செய்கிறாய். எங்களிடம் கொடுப்பாயா இல்லை நீயே வைத்துக் கொள்வாயா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார். மும்பையில் எனக்குள்ள வீடுகள் யார் பெயரில் இருக்கின்றன என்றும் கேட்டார்.

கேவலமாக அடிப்பார்

கேவலமாக அடிப்பார்

பிரின்சிக்கு கோபம் வந்தால் கொடூரமாக மாறி விடுவார். என்னை மிகக் கேவலமாக அடித்து துன்புறுத்தி ரசிப்பார். வீட்டிலேயே அடைபட்டு கிடந்தேன். நான் நல்ல ஆடை உடுத்துவதையும் கேவலமாக பேசுவார். யாரையும் சந்திக்கவும் விட மாட்டார்.

பாலியல் சித்ரவதை

பாலியல் சித்ரவதை

என் சொத்துக்களை எழுதிக் கேட்டார். குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து விடுவதாக எச்சரித்தார். என் குடும்பத்தினரை விபத்தில் சாகடித்து விடுவதாகவும் மிரட்டினார். ஒரு அமைச்சர் தனது கையில் இருப்பது போல் பேசினார். ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் என்னை பாலியல்ரீயில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சித்ரவதை செய்தார். இதனால் இரவு வந்தாலே பயப்பட ஆரம்பித்து விடுவேன்.

நிறைய பெண்களுடன் தொடர்பு

நிறைய பெண்களுடன் தொடர்பு

நிறைய பெண்களுடன் பிரின்சுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவார், குடிப்பார். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. அதுதான் அவரிடம் இருந்து என்னை காப்பாற்றியது என்று யுக்தா முகி கூறியுள்ளார்.

குழந்தையை காப்பாற்ற

குழந்தையை காப்பாற்ற

குழந்தையை பிரித்துவிடுவதாக பிரின்ஸ் மிரட்டி வருவதால் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார் யுக்தா முகி. குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போது அவனுக்கு மனரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இப்போது என் பெற்றோர் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் யுக்தாமுகி கூறியுள்ளார்.

தைரியமான பெண்

தைரியமான பெண்

யுக்தா முகி தைரியமான பெண். எதையும் சமாளிக்கும் திறமை அவளுக்கு இருக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் மீண்டுவிடுவாள் என்று நம்பிக்கை இருக்கிறது என்று யுக்தாமுகியின் நண்பர்கள் கூறியுள்ளனர். அவரது ரசிகர்களின் வேண்டுதலும் நம்பிக்கையும் யுக்தா முகியை காப்பாற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X