For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத்

  |
  NKP Fight making Scene:Ajithதின் நல்ல மனசு யாருக்கு Sir வரும்

  சென்னை: ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, எப்படி இது நடந்தது, எங்கெல்லாம் தொட்டான் என்பதை காலம் காலமாக கேட்டு அசிங்கப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார். பெண்களிடம் தப்பா பேசுவதே ஒருவித பாலியல் வன்முறைதான் என்றும் கூறியுள்ளார்.

  காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். குழந்தை பெத்துக்குறதுதான் பெண்களோட தகுதின்னு நினைக்கிறாங்க. என்னோட முடிவுகளை வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்தார்.

  தாய்மை என்பது வரம், பெண்மைக்கு அழகு தாய் ஆவது தான். ஒரு பெண் முழுமையான பெண் ஆகிறாள் அப்போதுதான், என்றெல்லாம் நாம் கேள்வி பட்டு இருக்கிறோமே ஆனால், அப்படி எல்லாம் ஒரு புடலங்காவும் இல்ல, அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான் தாய்மை என்பது ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து.

  பிக் பாஸ் தரப்போகும் அடுத்த ஷாக்.. 2வது வைல்ட்கார்ட் என்ட்ரியாகும் மது.. வனிதாவுக்கு செமகம்பெனி தான்பிக் பாஸ் தரப்போகும் அடுத்த ஷாக்.. 2வது வைல்ட்கார்ட் என்ட்ரியாகும் மது.. வனிதாவுக்கு செமகம்பெனி தான்

  நேர் கொண்ட பார்வை

  நேர் கொண்ட பார்வை

  நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபிறகு எடுத்த முடிவா அல்லது அப்பவே அவர் அப்படித்தானா என்பது தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன். பெண்ணுக்கு அது ஒரு தகுதி என்று நினைப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று அதிர்ச்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

  நடிகைகள் நம்பிக்கை

  நடிகைகள் நம்பிக்கை

  இவரைப் போலவே திருமணத்தில் நாட்டம் இல்லாத பல நடிகைகள் உள்ளனர். இதற்கு முன்னர் சுருதி ஹாசன் ஒரு முறை குழந்தை பெற்று கொள்ள விருப்பம் உண்டு, ஆனால் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை போயேவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.

  ஷ்ரத்தா ஸ்ரீநாத்

  ஷ்ரத்தா ஸ்ரீநாத்

  ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி யாருக்கும் தெளிவான பார்வை இல்லை. இப்போதும் நிறைய பேர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறைன்னு நினைக்கிறார்கள்.

  பாலியல் வன்முறை

  பாலியல் வன்முறை

  ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதும், அணுகுறதும்கூட பாலியல் வன்முறைதான். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது. நடைமுறையில் இன்னும் நிறைய நடவடிக்கைகள் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் தேவை என்று சொல்லி இருக்கிறார்.

  போலீசில் புகார்

  போலீசில் புகார்

  பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க. இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு வந்தா வழக்கு முடியவே நிறைய வருஷம் ஆகிடும்னு நினைக்குறாங்க.

  பெண்கள் பற்றிய பார்வை

  பெண்கள் பற்றிய பார்வை

  அதுமட்டுமில்லாம, ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, எப்படி இது நடந்தது, எங்கெல்லாம் தொட்டான் என்பதை காலம் காலமாக கேட்டு அசிங்கப் படுத்துவதை நிறுத்த வேண்டும். காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. ஆனால் பெண்கள் பற்றிய பார்வை மட்டும் மாறவேயில்லை.

  குழந்தைகள்

  குழந்தைகள்

  என் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெத்துக்கிட்டாங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். குழந்தை பெத்துக்குறதுதான் பெண்களோட தகுதின்னு நினைக்கிறாங்க. என்னோட முடிவுகளை வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது. என்னோட அறிவு, படிப்பை வெச்சுதான் என்னைத் தீர்மானிக்கணும் என்று அதிரடியாகக் கூறுகிறார்.

  புதுமை பெண்கள்

  புதுமை பெண்கள்

  தமிழ் சினிமாவில் பாலச்சந்தர் இயக்கத்தில் எத்தனையோ புதுமை பெண்களை பார்த்து உள்ளோம். பல இயக்குனர் பல விதமான போராடும் பெண்களை கதாபாத்திரங்களாக சித்தரித்து வெற்றி பெற்று மக்களுக்கும் நல்ல விசயங்களை சொல்லி இருக்கிறார்கள். வித்தியாசமான முடிவுகளை எடுக்கும் பெண்களை சமுதாயம் ஒரு தினுசாக தான் பார்க்கிறது. ஷ்ரத்தா கபூர் எடுத்த முடிவில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாரா அல்லது காலத்தின் கட்டாயத்தில் மாறுவாரா, என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  English summary
  I won't have a baby. I think women deserve a baby. No one should judge me for the results. Shraddha Srinath says that my knowledge and study will determine me.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X