90 ML: 'மை லைப்... மை ரூல்ஸ்...' படத்துல மட்டுமில்ல... நிஜத்துலயும் நீங்க அப்டி தான ஓவியா!
ஓவியா நடித்துள்ள 90 எம்எல் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: 90 எம்எல் படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து ஒரு காட்சியின் மூலம் விளக்கமளித்துள்ளார் நடிகை ஓவியா.
ஓவியா நடிப்பில் பிப்ரவரி 22ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 90 எம்எல். பெண் சுதந்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சர்ச்சையில் சிக்கியது.

படத்தில் நடித்துள்ள ஓவியா உள்ளிட்ட பெண்கள், சரக்கடிப்பது, சிகரெட், கஞ்சா புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், 'செமையா மேட்டர் பண்ணி கரெக்ட் பண்ணிடு' போன்ற ஆபாசன வசனங்களும் டிரெய்லர் காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் டிரெய்லரை பார்த்துவிட்டு, முழு படத்தின் கதையும் இப்படி தான் இருக்கும் என நினைக்காதீர்கள் என ஓவியாவும் அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததுடன், ஸ்னீக் பீக் காட்சி ஒன்றையும் ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மை என்ன என்பதை தெளிபடுத்துகிறார். "என் வாழ்க்கை என் கோட்பாடுகள் (my life my rules)" என்ற ஒரே வசனத்தின் மூலம் ஓவியா தனது கேரக்டரை புரியவைக்கிறார்.
படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஏறக்குறைய ஓவியா இதே போன்ற கேரக்டர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பிரபலமானதற்கு முக்கிய காரணமே அவரது இந்த வெளிப்படையான அணுகுமுறையே ஆகும். யாருக்காகவும் நடிக்காமல், தனது இயல்பை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததால் தான் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











