மீராமிதுன் அளவுலாம் உங்களால போக முடியாது..அவங்க வேற லெவல்..பிக்பாஸ் நடிகையை உசுப்பேற்றும் பேன்ஸ்!
மீராமிதுன் அளவுலாம் உங்களால போக முடியாது..அவங்க வேற லெவல்..பிக்பாஸ் நடிகையை உசுப்பேற்றும் பேன்ஸ்!
Recommended Video
சென்னை: மீரா மிதுன் அளவுக்கு உங்களால் போட்டோ போட முடியாது என்று நடிகை சாக்ஷி அகர்வாலை ரசிகர்கள் உசுப்பேற்றியுள்ளனர்.
தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

சண்டை பயிற்சி
பிக்பாஸ் சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன. இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, நடிகை சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

தற்காப்பு கலைகள்
இதுபற்றி நடிகை சாக்ஷி, இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக, சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருகிறேன் என்று கூறியிருந்தார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
View this post on InstagramMy life my rules🔥 Naan eppadi venalum eppo venalum pic poduven da🔥🔥🔥
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on
கிளாமர் போட்டோ
சாக்ஷி அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் சிறப்பு போட்டோ ஷுட்டையும் நடத்துவார். இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் இப்போது புதிய செல்ஃபி போட்டோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

எப்படி வேணாலும்
அதற்கு கேப்ஷனாக, என் வாழ்க்கை என் ரூல்ஸ். நான் எப்படி வேணாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவேன்டா' என்று கூறியுள்ளார். இதை சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர், 'நீங்க போடுங்க, ஆதரவு கொடுக்க நாங்க இருக்கோம்' என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அப்படியே லைவ் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

நடு ஜாமத்துல
'உங்களுக்கு என்ன வேணுமோ, அதை பண்ணுங்க. அதுதான் உங்க பலம். உங்களை யாரும் கேள்விக்கேட்க முடியாது' என்று சிலர் தெரிவித்துள்ளனர். 'எல்லாம் அந்த கொரோனாவால வந்தது, பாரு செல்லம் நடு ஜாமத்துலலாம் போஸ்ட் போடுது என்று சிலர் கலாய்த்துள்ளனர்.
'என்ன இருந்தாலும் மீரா மிதுன் அளவுலாம் உங்களால போட்டோ போட முடியாது.. அவங்க தைரியமானவங்க' என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

நசுக்கு நசுக்குன்னு
இன்னும் சிலர், உங்களை யாரு இப்ப என்ன சொல்லிட்டாங்கன்னு கோபப்படறீங்க? என்று கேட்டுள்ளனர். எல்லாம் சரி, மேக்கப் இல்லாம மட்டும் போட்டோ போட்டுடாதீங்க? என்று ஒரு நெட்டிசன் கிண்டலடித்துள்ளார். இன்னொருவர், தலைவி அவன் யாருன்னு மட்டும் சொல்லு, நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கிப் போட்டுடறேன்' என்று ஜாலியாகக் கூறியுள்ளார். சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











