சித்தார்த்துடன் திருமணம்...: சமந்தா சொல்வதைக் கேளுங்கள்!
நடிகர் சித்தார்த்துக்கும் சமந்தாவுக்கும் காதல்.. விரைவில் திருமணம் என தினசரி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு சமந்தாவும் சித்தார்த்தும் குடும்பத்தினரோடு சென்று ஜோடியாக ராகு, கேது பூஜை செய்ததால் இந்த செய்தி உறுதியாகியது.
இந்த நிலையில் இந்த செய்திகள் பற்றி சித்தார்த் கருத்து தெரிவிக்கையில், திருமணத்துக்கு நான் தயாராகிவிட்டேன். குடும்பம், குழந்தை என வாழும் ஆசை வந்து விட்டது என்றார்.
இதனால் திருமணத்துக்கு இருவருமே தயாராவதாக எழுத ஆரம்பித்தனர்.
ஆனால் இப்போது சமந்தா திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் என்கிறார்.
அவர் கூறுகையில், "எல்லோரும் எழுதுவதற்காக நான் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள முடியாது. நடிப்பில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது", என்றார்.
சமந்தாவுக்கு கைவசம் ஆறு படங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் முடிக்க எப்படியும் இரண்டு ஆண்டுகளாவது ஆகுமல்லவா...!


Click it and Unblock the Notifications












