என் அம்மா தப்பு, அண்ணன்கள் குடிகாரர்கள்... நடிகை சங்கீதா உருக்கம்
சென்னை: முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் பிதாமகன் திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சங்கீதா.
அதன் பின்னர் கடந்த்அ 2009-ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் முடித்தார்.
சமீபத்தில் தனது அம்மா தன் மீது சுமத்திய பல குற்றங்களுக்கு பதிலளித்துள்ளார் சங்கீதா.

நடிகர் நடிகைகளின் பிரச்சனை
பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் அவர்களது பெற்றோர் சிறு வயதிலேயே அவர்களை நடிக்க அனுப்பி வைத்துவிட்டு அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் மொத்த குடும்பத்தையும் சொகுசாக வாழ வைப்பார்கள். அதனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நடிகரும் நடிகையும் தங்களுடைய வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தது போல் வாழ முடியாமல் போய்விடுகிறது.

ஊதாரி அம்மா
வீட்டை விட்டு துரத்திவிட்டதாக உங்கள் அம்மா சமீபத்தில் புகார் கொடுத்திருந்தார்களே என்ற கேள்விக்கு, கஷ்டப்பட்டு நடித்து சேமித்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் பொழுது அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தேன். இப்போது கூட அவர்களுடைய செலவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதனை குறைத்துக் கொண்டேன். ஏடிஎம் மெஷினில் பணம் வரவில்லை என்றால் கோபத்தில் அதனை தட்டி பார்ப்போம் கொட்டிப் பார்ப்போம் அல்லவா, அது போலத்தான் இப்போது என்னிடமிருந்து பணம் அவர்களுக்கு போகவில்லை என்பதால் என் மீது குற்றம் கூறுகிறார்கள்.

வீட்டுக் கடன்
உங்கள் தாத்தா உங்கள் அம்மாவிற்கு எழுதிக் கொடுத்த வளசரவாக்கம் வீட்டை இப்போது நீங்கள் கைப்பற்றிக் கொண்டீர்களாமே என்ற கேள்விக்கு, அதன் பத்திரத்தை பார்த்தால் யாரிடம் இருந்து வந்தது என்று தெரிந்துவிடும். அது மட்டுமின்றி அந்த வீட்டின் மேல் நிறைய கடன்கள் இருந்தது. அதனை அடைத்த பின்னர்தான் என் பெயருக்கு வந்தது. ஒருவேளை நான் கடன் அடைக்காவிட்டால் கடன் கொடுத்தவருக்கு வீடு சென்றிருக்கும். அது மட்டுமின்றி அந்த வீட்டில் இப்போதும் என் அம்மாதான் குடியிருக்கிறார். அவர்கள் கூறுவது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு என்று சங்கீதா கூறியிருக்கிறார்.

குடிகார அண்ணன்கள்
குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயது இருக்கும்போதே என்னை நடிக்க அனுப்பி வைத்து விட்டார்கள். என்னுடைய சகோதரர்கள் குடிகாரர்கள். அம்மா ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். மொத்த குடும்ப சுமையையும் என் மீது சுமத்தி நடிக்க வைத்தார்கள். யாராக இருந்தாலும் ஒரு அம்மாவை குற்றம் சுமத்த மாட்டார்கள். ஆனால் எங்கள் விஷயத்தை பொறுத்த வரை என் அம்மா தப்பு என்று மனம் வருந்தி பேசி இருக்கிறார் சங்கீதா.


Click it and Unblock the Notifications











