'அவனை 20 நிமிஷம் பார்த்ததுமே பெண்பித்தன்னு சொல்லிட்டாங்க, அம்மா..' சிம்பு ஹீரோயின் அடுத்த அட்டாக்!

By

சென்னை: அவனைப் பார்த்த முதல் நாளிலேயே, அவன் பெண்பித்தன் என்று தன் அம்மா கூறியதாக சிம்பு பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், சனாகான். பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில், விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.

துரோகம் செய்துவிட்டார்

துரோகம் செய்துவிட்டார்

இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார், நடிகை சனா கான். இது பரபரப்பானது.

காதலித்தேன்

காதலித்தேன்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதாகக் காதலித்தேன். ஆனால் அவர் செய்த செயல்கள் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின், சிலரை ஏமாற்றுவதாக ஒருவர் எனக்கு தெரிவித்தார். அவர் பற்றிய உண்மை தெரிய வந்ததால் காதலை முறித்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

நம்பிக்கை வருமா?

நம்பிக்கை வருமா?

'மெல்வின் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அவர் யார் என்று தெரியும். ஆனால் அவர் பெயரை வெளியிடுவது சரியில்லை. மெல்வினிடம் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார். இனி ஆண்கள் மீது நம்பிக்கை வருமா? என்பது தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜாடையாக மோதிக்கொண்டனர். பின்னர் நேரடியாகவே சண்டையிட்டனர்.

தவறான ஆள்

தவறான ஆள்

பின்னர் சனா கூறும்போது, மெல்வின் என்னை உடல் ரீதியாக தாக்கினார். என் மண்டையில் ரத்தம் வடிந்திருக்கிறது. முகத்திலும் காயங்கள் இருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அதை இன்னும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது அம்மா, மெல்வினை பார்த்ததுமே தவறான ஆள் என்று சொன்னார் எனக் கூறியுள்ளார்.

பக்கத்தில் சேர்க்காதே

பக்கத்தில் சேர்க்காதே

'வெறும் 20 நிமிடம்தான் சந்தித்தார், என் அம்மா. மறுநாள் காலையில் எழுந்ததுமே, எனக்கு ஒன்று தோன்றுகிறது, சொல்கிறேன். அவன் பெண்பித்தன் போல் இருக்கிறான், அவனை நண்பனாகக் கூட பக்கத்தில் சேர்க்காதே என்று கூறினார். அப்போது எனக்குத் தெரியவில்லை. அது உண்மை என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். இதைச் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன், தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அதிர்ச்சி அடைந்தேன்

அதிர்ச்சி அடைந்தேன்

அவனுக்கு சொந்த வீடு இல்லை, சொந்த கார் இல்லை, பேங்க் பேலன்ஸ் இல்லை, இவ்வளவு ஏன்? தோற்றம் கூட அழகாக இல்லை. இருந்தாலும் காதலித்தேன். ஆனால், இவ்வளவு மோசமாக இருப்பான் என்று நினைக்கவில்லை. சமீபத்தில் 16 வயது சிறுமி என்னைச் சந்தித்தாள். அவள் சொன்ன கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவளை மானபங்கம் செய்ய முயற்சி செய்திருக்கிறான்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X