For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன்- வித்யா பாலன்

|
Actress Vidhya Balan: About her harmonal problems உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்

சென்னை: நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்து சிறப்பாக செல்கிறது. இது வருங்காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

பாலக்காட்டு பெண்குட்டியான வித்யா பாலன் தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர். கேரளா பூர்வீகம் என்றாலும் பிறந்து வளர்ந்து செட்டில் ஆனது எல்லாம் மும்பை மாநகரிலே. மிகவும் பரிச்சயமான முகம். ஆம் நாம் விளம்பரங்களில் அதிகம் பார்த்த முகம்.

my whole life is about acting-Actress Vidya Balan

தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பப்பட்டாலும் சரியான வாய்ப்புகள் கிடைத்தும் நிராகரிக்கப்பட்டவர். கமல்ஹாசனின் தசாவதாரம், மாதவனுடன் ரன், ஸ்ரீகாந்துடன் மனசெல்லாம், மோகன்லாலுடன் சக்கரம் எனும் மலையாள படம் என வாய்ப்புகள் கிடைத்தாலும் கடைசியில் என்னென்வோ காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்.

திரையுலகிற்குள் பாலோ தேகோ எனும் வங்காள திரைப்படம் மூலம் கால் எடுத்து வைத்தார். பிறகு பரிநீத்தா எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அவரது பயணம் ஆரம்பமானது. அப்படி ஆரம்பித்த திரைப்பயணம் இன்று வித்யா பாலனை ஒரு பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக மேம்படுத்தியுள்ளது.

my whole life is about acting-Actress Vidya Balan

2011ஆம் ஆண்டு வெளியான தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததோடு, பாராட்டுகளையும் விருதையும் வாரி குவித்தது. தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றின கதை. அப்படத்திற்காக தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதினையும் பெற்றார்.

தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் ஒரு சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த வித்யா பாலன் அவரின் உண்மையான வயதை எந்த ஒரு தயக்கமும் இன்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் 26 வயதில் வாழ்க்கையில் திருமணம், குழந்தை குட்டிகள் என்று செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் நானோ 26 வயதில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தேன். அதனால் என்னுடைய திரை பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.

my whole life is about acting-Actress Vidya Balan

40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். மேலும் என் வாழ் நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்து சிறப்பாக செல்கிறது. இது வருங்காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார் வித்யா பாலன்.

பல நடிகைகள் தங்களுடைய உண்மையான வயதை வெளிப்படையாக சொல்வதற்கு சிறிதளவேனும் தயங்குவார்கள். ஆனால் வித்யா பாலனோ எந்த ஒரு ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருப்பது அவரின் தனித்துவத்தை காட்டுகிறது.

English summary
I have been in the screen industry for 14 years. And I think my whole life is about acting. There are currently better opportunities and better going. I am hopeful that this will continue in the future, said Vidya Balan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more