நாக சைதன்யா பிரிந்ததற்கு அந்த நோய்தான் காரணமா?.. சமந்தா அதை ஒத்துக்கொண்டாரா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா; திடீரென அவரை பிரிந்தார். அந்த பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த அவர் அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க சைதன்யா - சமந்தாவின் பிரிவு எதற்காக நடந்தது என்று இன்னும் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிதான் வருகின்றனர். இந்நிலையில் சமந்தா செய்திருக்கும் செயல் மீண்டும் அந்த விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் பேச்சை எழுப்பியிருக்கிறது.
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் இப்போது கூலி, குபேரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவரது மகனும் நடிகருமான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இரண்டு பேருக்கும் ஆன் கேமராவில் இருந்த கெமிஸ்ட்ரி ஆஃப் கேமராவிலும் ஒர்க் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்கள்.

பாதியில் முடிந்த திருமண உறவு: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் அன்யோன்யத்தோடு தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள். சமந்தா தொடர்ந்து நடிப்பதற்கு தனது முழு ஆதரவை கொடுத்தார் நாக சைதன்யா. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு; தாங்கள் இரண்டு பேரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக கூறினார்கள். அவர்களது அந்த அறிவிப்பு பலரையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரிந்ததற்கு என்ன காரணம்?: அதற்கு காரணம் சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்ததுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உண்மை இல்லை சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் தங்களது பிரிவுக்கு சைதன்யாவோ, சமந்தாவோ தெளிவான காரணத்தை ஓபனாக சொல்லவில்லை. பிரிவுக்கு பிறகு சமந்தா மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.அந்தவகையில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

சமந்தாவின் செயல்: இந்நிலையில் சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கான காரணம் குறித்து மீண்டும் சிலர் சமூக வலைதளங்களில் பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது இன்ஸ்டாகிராமில் இருக்கும் பக்கத்தில், நோய்வாய்ப்பட்ட மனைவியை ஆண்கள் விட்டு செல்வது' தொடர்பாகவும், அதுதொடர்பான புள்ளி விவரமும் அடங்கிய வீடியோ ஒன்று உலா வருகிறது. அந்த வீடியோவுக்கு பலர் லைக்குகளை இட்டு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டுவருகிறார்கள். அந்த வீடியோவுக்கு சமந்தாவும் தனது லைக்கை கொடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் எழுப்பும் கேள்வி: சமந்தா லைக்கிட்டதை பார்த்த ரசிகர்களோ, 'இந்த வீடியோவுக்கு சமந்தா லைக்கிட்டிருக்கிறாரே. எனில் இவரும், நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணமா?.. இந்த ஒற்றை லைக் மூலம் நீண்ட கால கேள்விக்கு மறைமுகமாக ஆம் என்ற பதிலை அவர் கொடுத்திருக்கிறாரோ' என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.
மீண்டும் திருமணம்: இதற்கிடையே, நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலித்தார்கள். இவர்களின் காதலுக்கும் நாகார்ஜுனா தரப்பு க்ரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இவர்களின் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா இன்றுவரை சிங்கிளாகவே இருக்கிறார். இருப்பினும் அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











